இந்த பாடல்கள் இவருடையதா?.. ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இசையமைப்பாளர் வி.குமார்
V.Kumar Death Anniversary: இசையமைப்பாளரின் வி குமாரின் 27 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசை ஜாம்பவானாக விளங்கியவர்கள் கே.வி மகாதேவன், மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் இவர்கள் உச்சத்தில் இருந்தாலும் இவர்களுக்கு மத்தியில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இசையமைத்து வெற்றி படங்களை கொடுத்துள்ளனர்.
மெல்லிசை சக்கரவர்த்தியாக 70 80களில் வலம் வந்தவர் இசையமைப்பாளர் வி. குமார். இவர் இசையில் தனித்துவமான மகத்துவம் என்னவென்றால் இந்தியா மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகளை பயன்படுத்தி அனைத்து பாடல்களையும் இயற்றியுள்ளார். இயக்குனர் சிகரமாக விளங்கக்கூடிய கே. பாலச்சந்திரன் ஆஸ்த்தான இசையமைப்பாளராக இவர் இருந்து வந்துள்ளார்.
மிகப்பெரிய ஜாம்பவான்கள் ஜொலித்த காலத்தில் இவர் பெரிதும் கொண்டாடப்படாத நிலையில் இருந்து வந்தார். இவரது பாடல்களைக் கேட்ட அனைவரும் இது எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடலாக இருக்கும் என நினைத்து இருப்பார்கள் அதற்குப் பிறகு கங்கை அமரன் மற்றும் இளையராஜா இருவருக்கும் இது போன்ற சிக்கல் ஏற்பட்டது. அந்த அளவிற்கு இசையமைப்பாளர் குமார் மெல்லிசையில் விளையாடினார்.
இசையமைப்பாளர் வி குமாரின் இயற்பெயர் குமரேசன். இவர் நாடகங்களில் இசையமைத்தபோது இவரை குமார் என அனைவரும் அழைத்துள்ளனர் அதனால் அதுவே இவரது பெயராக மாறியது. சென்னையில் பிறந்த இவர் தொலைபேசி அலுவலகம் முன்பு வேலை செய்து வந்துள்ளார்.
இசையின் மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தினால் இசைக்குழு ஒன்று அமைத்து பல நாடகங்களுக்கு இசையமைத்து வந்துள்ளார். நாடகங்களில் இசையமைத்த காரணத்தினால் இயக்குனர் கே.பாலச்சந்தரின் அறிமுகம் இவருக்கு கிடைத்துள்ளது.
நாகேஷ் நடித்து வெளியான நீர்க்குமிழி திரைப்படத்தில் இவருக்கு அறிமுகம் கிடைத்தது இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளருக்கு குமார் மற்றும் இணை இசையமைப்பாளராக ஏ.கே.சேகர் பணியாற்றியுள்ளார். இதில் இணை இசையமைப்பாளராக சேகர் என்பவர் தற்போது இசையமைப்பாளராக உச்சத்தில் இருக்கும் ஏ.ஆர். ரகுமானின் தந்தை ஆவார்.
நடிகர் சிவாஜி கணேசனுக்கு இவர் நிறைகுடம் என்ற திரைப்படத்தில் இசையமைத்து பாடல்கள் அனைத்தையும் வெற்றியாக்கினார். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 150 திரைப்படங்களுக்கு மேல் இவர் இசையமைத்துள்ளார்.
கனத்த குரலோடு மக்களை கவர்ந்து வைத்திருந்த எல்.ஆர்.ஈஸ்வரியை மெல்லிய குரலாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான். காதோடு தான் நான் பாடுவேன் என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழ்நாடு அரசு இவருக்கு 1977 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது மெல்லிசை மாமணி என்ற பட்டத்தை கொடுத்து எம்ஜிஆர் இவரை கவுரவித்தார்.
பல்வேறு விதமான நல்ல பாடல்களை கொடுத்து பல விருதுகளை பெற்ற இவர். மெல்லிசைக் கலைஞனாக போற்றப்பட்ட வி.குமாரின் 27 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நல்ல கலைக்கு அழிவில்லை என்பது போல் நல்ல கலைஞர்களுக்கும் அழிவு கிடையாது என்பதற்கு இவர் மிகப்பெரிய உதாரணமாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்