தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  K.v.mahadevan: காலம் கடந்த இசை.. சகாப்தமாக வாழும் கே.வி.மகாதேவன்.. திரை இசை திலகத்தின் நினைவு நாள்

K.V.Mahadevan: காலம் கடந்த இசை.. சகாப்தமாக வாழும் கே.வி.மகாதேவன்.. திரை இசை திலகத்தின் நினைவு நாள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 21, 2024 06:00 AM IST

K.V.Mahadevan: வாலி பாடலுக்கு நோ சொன்ன எம்எஸ்வி பின்னர் அந்த பாடலை ஹிட் பாடலாக்கிய கே.வி.மகாதேவன் குறித்து வாலி ஒரு மேடையில் கூறிருப்பார். அதில், கே.வி.மகாதேவன் இசையில், வாலி எழுதிய வரிகளில் அற்புதமான பாடல் அரச கட்டளை படத்தில் இடம்பெற்ற புத்தம் புதிய புத்தகமே பாடல்.

காலம் கடந்த இசை.. சகாப்தமாக வாழும் கே.வி.மகாதேவன்.. திரை இசை திலகத்தின் நினைவு நாள்
காலம் கடந்த இசை.. சகாப்தமாக வாழும் கே.வி.மகாதேவன்.. திரை இசை திலகத்தின் நினைவு நாள்

K.V.Mahadevan: நம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளம் கே.வி.மகாதேவன்.இந்தியாவில் தேசிய அளவில் சிறந்த இசையமைப்பாளருக்கான முதல் விருதை வென்றவர். அதற்கு முன்பிருந்த ஜாம்பவான்களின் எந்தச் சாயலுமில்லாமல், புது பாணியில் இசையைக் கொடுத்தவர் இவர். நாகர்கோவில் பக்கம் கிருஷ்ணன் கோயில்தான் இவரின் சொந்த ஊர்.

இவரின் தந்தை வெங்கடாசல பாகவதர். தாய் லட்சுமி அம்மாள். 1918-ம் ஆண்டு பிறந்த மகாதேவனுக்கு, முறைப்படி சங்கீதம் கற்றுக்கொடுக்க அனுப்பிவைத்தார் தந்தை வெங்கடாசல பாகவதர். அருகில் உள்ள பூதப்பாண்டி எனும் கிராமத்தில் அருணாசலக் கவிராயர் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். இவரின் கற்றறியும் வேகம் கண்டு வியந்த அருணாசலக் கவிராயர் பார்ப்பவர்களிடம் சொல்லிப் பூரித்தாராம். அந்த அளவிற்கு கே.வி.மகாதேவன் இசை ஞானம் இருந்துள்ளது.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.