இளையராஜா சார் வீட்டு வாசல்ல அழுதுட்டு வாய்ப்பு கேட்டு நின்னேன்.. இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் ஷேரிங்ஸ்
இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசைஞானி இளையராஜாவிடம் வேலைக்கு வாய்ப்பு கேட்டு அவர் வீட்டு வாசலில் காத்திருந்து அழுததாக கூறியுள்ளார்.
காதல் படத்தின் இசை இன்றளவும் நம்மை இளமையாகவும் துடிப்போடும் வைத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் உள்ள பாடல்களின் இசையும் வரிகளும் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன.
ஜோஷ்வா ஸ்ரீதர்
காதல் படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் என்பவர் தான் இசையமைத்துள்ளார். ஆனால், படம் வெளியான சமயங்களில் ஜோஷ்வா ஸ்ரீதர் எனும் பெயருக்கு பதில் பலரும் தங்களின் விருப்பமான இசையமைப்பாளர்களின் பெயரை குறிப்பிட்டு கிரெடிட்களை கொடுத்து வந்தனர்.
பின் நாட்கள் செல்ல செல்ல தான் இவரது பெயர் மக்களின் உதடுகளில் இருந்து வெளிவரத் தொடங்கியது. காதல், கல்லூரி எனும் பெயர் சொல்லும் அளவிலே தமிழ் படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் இவரின் இசை இன்னும் மனதிற்குள் இளமையாகத் தான் ஒலித்துக் கொண்டிருக்கும்.
நிறைவேறாத லட்சியம்
அப்படி, ஒரு இசையமைப்பாளராக வந்த இவருக்கு தன் வாழ்நாள் லட்சியமே நிறைவேறாமல் போன கதை பற்றி தெரியுமா? வாய்ப்பு கேட்டு அழுது சென்ற கதை தெரியுமா? ஜோஷ்வா ஸ்ரீதரே தன் சினிமா வாழ்க்கை பற்றி சினிமா விகடன் பத்திரிகைக்கு விளக்கமாக பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், "இவர் சினிமாவிற்குள் காதல் படத்திற்கு இசையமைக்கும் முன்னே இவர் தமிழ் சினிமாவில் கீபோர்டு பிளேயராக பணியாற்றி வந்துள்ளார். 1992ல தான் எனக்கு மியூசிக் படிக்கவே வாய்ப்பு கிடைச்சது.
இது தான் என் வாழ்நாள் ஆசை
எனக்கு மியூசிக் கத்துகிட்டு இளையராஜா சார்கிட்டட வேலை செய்யணும்ன்னு ஆசை. அதனால ஒரே வருஷத்துல தியரி, பிராக்டிகல் ரெண்டுலயும் 1-8 கிரேடையும் படிச்சி முடிச்சேன்.
அந்த சமயத்துல தாத்தா சொத்துன்னு 2 லட்சம் வந்தது. அந்த காசு மொத்ததையும் இசைக் கருவி வாங்க யூஸ் பண்ணிட்டேன். ஏதோ குருட்டு நம்பிக்கையில ஏவிஎம் ஸ்டூடியோ வாசல்ல போய் நின்னா எனக்கு ராஜா சார்கிட்ட வாய்ப்பு கிடைக்கும்ன்னு போறேன்.
செக்யூரிட்டி உள்ள விடல
அங்க என்ன செக்யூரிட்டி உள்ளயே விடல. நீங்க முதல்ல தமிழான்னு கேக்குறாங்க. நானும் தினமும் போறன் என்ன உள்ளேயே விடல. அப்புறம் இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு சொல்லிட்டு கார்த்திக் ராஜா ஸ்டூடியோ வரும்போது அவர மடக்கி பிடிச்சிட்டேன். அவர்கிட்ட என்னோட கதை எல்லாம் சொல்லி வாய்ப்பு கேக்குறேன். அவரு, என்னையும் சேர்த்து ஏற்கனலே 4 கீபோர்டு பேளயர் இருக்கோம். அதனால வாய்ப்பு கிடைக்குறது கஷ்டம் வேற மியூசிக் டைரக்டர பாருங்கன்னு சொல்றாரு. ஆனா, நான் விடாப்பிடியா நிக்குறேன்.
வீட்டு வாசல்ல அழுதுட்டு நின்னேன்
கார்த்திக் ராஜா என்னோட நம்பர் எல்லாம் வாங்கிட்டு அப்பாட்ட பேசுறேன்னு சொன்னாரு. ஆனா எனக்கு நம்பிக்கை இல்லாம அவர் வீட்டுக்கே போயிட்டேன். அங்க போனா ஃபுல்லா மழை. ரொம்ப நேரமா அவர் வீட்டு முன்னாடியே நிக்குறேன். அப்போ எனக்கு அழுகா வேற வருது. மழையில நின்னு அழுதுட்டு இருக்கும் போது செக்யூரிட்டி கார்த்திக் ராஜாகிட்ட போய் சொல்லி என்ன உள்ள கூப்டுறாங்க. அப்போவும் அதே பதில் தான்.
19 வயசுல கல்யாணம் குடும்பம்
எனக்கு மனசு உடஞ்சு போச்சு. அப்போ எனக்கு 19 வயசு தான் ஆகிருந்தாலும் எனக்கு கல்யாணம் எல்லாம் ஆச்சு. நான் இந்துவா பிறந்தாலும் இசையால ஈர்க்கப்பட்டு கிருஸ்தவனா மதம் மாறியிருந்தேன். எனக்கு ஊர விட்டே போயிடலாம்ங்குற அளவுக்கு வேதனை.
அந்த சமயத்துல தான் நான் சர்ச்சுக்கு வாசிக்க ஆரம்பிச்சேன். அப்போ ஏ.ஆர்.ரஹ்மானோட அசிஸ்டென்ட் நவீன்ங்குறவங்க எனக்கு கால் பண்ணி கிருஸ்டியன் ஆல்பம் பண்ண ஹெல்ப் கேட்டாரு. அவர் மூலமா ரஹ்மான் சார்கிட்டயும் வாய்ப்பு கேட்டேன் கிடைக்கல. அதனால நான் சர்ச்சுக்கு தான் மியூசிக் பண்ண போனேன்னு தன் வாழ்நாள் கனவு சிதைந்து போன கதையை விவரிக்கிறார்.
டாபிக்ஸ்