James Vasanthan: ‘நான் இசையிலிருந்து திசை மாறியது உண்மை தான்..’ உடைத்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்!
‘சுப்பிரமணியபுரம் பாடல்கள், பசங்க பாடல்கள் ஹிட் ஆன போது. புராஜக்ட்டை கொஞ்சம் அவசரப்படாமல் பண்ணுங்க சார் என சசிக்குமார் என்னிடம் கூறிக்கொண்டே இருந்தான்’

தொகுப்பாளராக வந்து, பின்னர் இசை கலைஞராகி, பின்னர் இசை அமைப்பாளராக மாறி, தற்போது கடுமையான விமர்சகராகவும் மாறியிருக்கம் ஜேம்ஸ் வசந்தன், யூடியூப் சேனலுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
‘‘கோவிட் நேரத்தில் நிறைய நேரம் இருந்ததால் பல வேலைகளை பலரும் செய்தார்கள். அப்படி தான் நானும் பல வேலைகளை செய்தேன். இருந்தும் நேரம் அதிகம் இருந்தது. என்னுடைய உதவியாளர்களுக்கு எல்லாம் நான் தான் முடி திருத்தம் செய்தேன். அப்படியும் நேரம் போகவில்லை. கண்ணாடியில் பார்த்த போது முகத்தில் மீசை இருந்தது, நேரம் போகாமல் அதை எடுத்தேன். கடைசியில் அதையே வழக்கமாக்கிவிட்டேன்.
மீசையை எடுத்த நாளிலிருந்து என் மனைவிக்கும் எனக்கு பயங்கர சண்டை. நண்பர்கள் தரப்பிலும் ‘தயவு செய்து மீசை வை’ என்று கூறிவிட்டார்கள். ஆனாலும் நான் மீசை இல்லாமல் தொடர்கிறேன்.
