தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Muneesh Raja Latest Interview About Rajkiran Daughter Zeenat Priya Wedding Issues

Muneesh Raja: ‘சதியை அம்பலப்படுத்துவேன்’ - பிரியாவிற்கு முனீஸ் பதிலடி!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 03, 2024 01:15 PM IST

நான் 2022ம் ஆண்டு முனீஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்டேன். அந்த கல்யாணத்திற்கு பிறகு, நாங்கள் தற்போது தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில மாதங்கள் ஆகி விட்டன.

முனீஸ்ராஜா பேட்டி!
முனீஸ்ராஜா பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்களது திருமணத்திற்கு ராஜ்கிரண் எதிர்ப்பு தெரிவித்ததோடு பிரியா தன்னுடைய மகள் இல்லை, அவர் தன்னுடைய வளர்ப்பு மகள் என்று விளக்கம் அளித்தார். இதனையடுத்து விளக்கம் கொடுத்த முனீஸ்ராஜா, “பிரியாவின் அம்மாவான பத்மஜாவின் முன்னாள் கணவர் இளங்கோவனுக்கு பிறந்தவர்தான் பிரியா.

இளங்கோவனோடு கிட்டத்தட்ட 18 வருடங்கள் வாழ்ந்த பத்மஜா அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ராஜ்கிரண் உடன் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டார். அப்படி வரும் போது, பத்மஜா பிரியாவையும் அழைத்து சென்று இருக்கிறார்.” என்றார்.

மேலும், அப்போது இருவரும் நிறைய நகைகளை அணிந்து இருந்தனர். அதை பிரியா திருப்பி கேட்டதற்காக பத்மஜா தங்கள் மீது புகார் அளித்திருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த விவகாரம் இப்படியே சென்று கொண்டிருக்கும் நிலையில், பிரியா நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில், “ நான் 2022ம் ஆண்டு முனீஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்டேன். அந்த கல்யாணத்திற்கு பிறகு, நாங்கள் தற்போது தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில மாதங்கள் ஆகி விட்டன.

எங்கள் கல்யாணம் சட்டப்பூர்வமான கல்யாணம் கிடையாது. இந்த கல்யாணத்திற்கு பிறகு, என்னுடைய வளர்ப்பு அப்பாவை நான் மிகவும் காயப்படுத்தி விட்டேன். மூன்ஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் எனக்கு சில பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. அந்த நேரங்களில் கூட என்னுடைய வளர்ப்பு அப்பா என்னை கைவிட வில்லை. இது நான் எதிர்பார்க்காத கருணை. நான் எத்தனை முறை மன்னிப்புக்கேட்டாலும் பத்தாது. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் அப்பா” என்று பேசி இருந்தார்.

இதற்கு தற்போது முனீஸ்ராஜா பதில் கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோவில், “ வணக்கம் நான் நடிகர் முனீஸ் ராஜா பேசுகிறேன். நேற்று என்னுடைய மனைவி பிரியா வீடியோ ஒன்றில் தோன்றி பேசியிருந்தார். 

அந்த வீடியோவை நீங்கள் பார்த்தாலே தெரியும். அவரே அதை பேசினாரா அல்லது யாராவது சொல்லி பேச வைத்தார்களா என்று.... 

அவர் எங்களுடைய கல்யாணம் சட்டப்படி நடக்கவில்லை என்று கூறியிருந்தார். அது உண்மையா பொய்யா நாங்கள் திருமணம் செய்து கொண்டோமா இல்லையா..? இதற்கு பின்னால் யார் இருக்கிறார்.. யாரெல்லாம் இதற்கு பின்னால் சதி செய்து இருக்கிறார்கள் என்பது குறித்தான விவரங்களை மக்களுக்கும் மீடியாவிற்கும் முறைப்படி தெரிவிக்கிறேன். தயவுசெய்து தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்” என்று பதிவிட்டு பேசி இருக்கிறார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.