Bookmyshow : ‘கோல்ட்ப்ளே’ டிக்கெட் மோசடி புகார்.. ‘புக் மை ஷோ’ மீதான விசாரணை முடித்து வைப்பு!
Bookmyshow : விசாரணையின் போது, டிக்கெட் விற்பனை தில்லுமுல்லு செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் கிடைக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bookmyshow : சமீபத்தில் முடிவடைந்த கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சி 'போலி டிக்கெட்' சர்ச்சையில் சிக்கிய ‘புக் மை ஷோவு’க்கு எதிரான ஆரம்ப விசாரணையை மும்பை போலீசார் முடித்து வைத்துள்ளனர். விசாரணையின் போது சர்ச்சைக்குரிய போட் எதுவும் கையாளப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்காததால் விசாரணை நிறைவடைந்ததாக ஃப்ரீ பிரஸ் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புக் மை ஷோ மீதான புகாரும் விசாரணையும்
புக் மை ஷோ நிறுவனம் மீது செப்டம்பர் மாதம், மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (ஈ.ஓ.டபிள்யூ) இந்த விவகாரத்தில் பூர்வாங்க விசாரணையை (பி.இ) பதிவு செய்தது. மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமித் வியாஸ், புக் மை ஷோ, லைவ் நேஷன் என்டர்டெயின்மென்ட் மற்றும் அவற்றின் உயர் நிர்வாகத்திற்கு எதிராக மும்பை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். பிரிட்டிஷ் ராக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி கடந்த மாதம் நவி மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
புகாரின்படி, புக்கிங் நிறுவனங்கள் டிக்கெட் தளத்திலிருந்து உண்மையான ரசிகர்களை வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது, தானியங்கி போட்களைப் பயன்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் வரிசையை செயற்கையாக உயர்த்தியதாகவும், இது உண்மையான வாங்குபவர்கள் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதைத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது கோல்ட்ப்ளே ரசிகர்களிடையே பரவலான கோபத்தைத் ஏற்படுத்தியது. கண்டனங்களும் எழுந்தன.
போலீஸ் தரப்பு கூறும் வாதம் என்ன
விசாரணையின் போது, டிக்கெட் விற்பனை தில்லுமுல்லு செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் கிடைக்கவில்லை என்றும், டிக்கெட்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் வெவ்வேறு தொகைகளை செலுத்தியதில், புக் மை ஷோ சில மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களுக்கு டிக்கெட் விற்பனையை ஆதாரமாகக் கொண்டது என்றும், அத்தகைய தளங்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் அதிக தொகையை செலுத்தியிருக்கலாம் என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்த விஷயம் யாருடைய அடிப்படை உரிமைகளை மீறவில்லை என்றும், மேலும் யாரும் வற்புறுத்தல் மூலம் டிக்கெட்டுகளை வாங்க கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும், ஒரு குற்றவியல் புகாருக்கு இது ஒரு மூலப்பொருளாக போதுமானதாக இல்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பணம் செலுத்தும் போது, வாடிக்கையாளர் தொகையை ஒப்புக்கொள்கிறார் என்பதால், இந்த விவகாரம் சிவில் வழக்கில் ஒப்பந்தப் பொறுப்பும் குறைவாகவே உள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக ஃப்ரீ பிரஸ் ஜர்னலுக்கு பேட்டியளித்த போலீஸ்காரர் தெரிவித்துள்ளார்.
வழக்கு ஏன் முடித்து வைக்கப்பட்டது
ஆன்லைனில் நடந்த டிக்கெட் முன்பதிவில், நாட்களின் அடிப்படையில் விலை மாற்றத்தை கண்டிருக்கலாம். அவ்வாறு மாறும் போது அதை முன்பதிவு செய்பவர், விலையை அறிந்தே முன் பதிவு செய்கிறார். இது ஒருவரின் ஒப்புதலின் பேரில் நடக்கும் விசயம் என்பதால், குற்றவியல் நீதித்துறையின் கீழ் மோசடி வழக்காக இதை கருத முடியாது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனம், புகார்தாரர் எஃப்.பி.ஜே அமித் வியாஸைத் தொடர்பு கொண்டு அவர் கருத்தை கேட்டுள்ளது. அதற்கு அவர், ‘வழக்கு மூடப்பட்டது குறித்து, தனக்கு எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும், அது ஏமாற்றத்தை அளிப்பதாகவும்’ செய்தி நிறுவனத்திடம் அவர் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.

தொடர்புடையை செய்திகள்