“ நீ யார் மனைவின்னு தெரியுமல்லவான்னு சொல்வார்.. அவர் போன அடுத்த 2 வருஷத்த..பெரிய கமல் ரசிகர்!”- மேஜர் மனைவி இந்து
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “ நீ யார் மனைவின்னு தெரியுமல்லவான்னு சொல்வார்.. அவர் போன அடுத்த 2 வருஷத்த..பெரிய கமல் ரசிகர்!”- மேஜர் மனைவி இந்து

“ நீ யார் மனைவின்னு தெரியுமல்லவான்னு சொல்வார்.. அவர் போன அடுத்த 2 வருஷத்த..பெரிய கமல் ரசிகர்!”- மேஜர் மனைவி இந்து

Kalyani Pandiyan S HT Tamil
Published Oct 08, 2024 04:19 PM IST

போரில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தின் மனைவியான இந்து, முகுந்தின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்து பேசி இருக்கிறார்.

“ நீ யார் மனைவின்னு தெரியுமல்லவான்னு சொல்வார்.. அவர் போன அடுத்த 2 வருஷத்த..பெரிய கமல் ரசிகர்!”-  மேஜர் மனைவி இந்து
“ நீ யார் மனைவின்னு தெரியுமல்லவான்னு சொல்வார்.. அவர் போன அடுத்த 2 வருஷத்த..பெரிய கமல் ரசிகர்!”- மேஜர் மனைவி இந்து

முன்னதாக, இந்தப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆன நிலையில், அண்மையில் படத்தில் இருந்து ‘மின்னலே’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தின் புரோமோஷன் தொடர்பான பணிகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில், மலேசியாவில் நடந்த புரோமோஷன் நிகழ்வில், படக்குழுவுடன் முகுந்தின் மனைவியான இந்துவும் பங்கேற்று பேசினார்.

இந்து
இந்து (Raaj Kamal Films International)

அவர் பேசும் போது, “2014 ஆம் ஆண்டு முகுந்த் வீரமரணம் அடைந்தார். அவர் இறந்த முதல் வருடத்தில் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். அவர் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்தது ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும், அவரின் இழப்பை என்னால் ஈடுசெய்ய முடியவில்லை. சோகத்தில் மூழ்கி போயி இருந்தேன். அவர் இறந்த முதல் இரண்டு வருடங்கள் கடப்பதற்கு மிகவும் கடினமானவையாக இருந்தன. ஒரு கட்டத்தில், அவர் தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்தேன்.

அப்போதுதான் ராஜ்குமார் பெரியசாமி முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அனுமதி கேட்டு வந்தார். முகுந்திற்கு திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவர் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகர். அவரின் அன்பே சிவம் படமானது அவருக்கு மிகவும் பிடிக்கும். இந்த நிலையில், இந்த ஐடியாவை அவர் கேட்டால் அவர் மிகவும் சந்தோஷப்படுவார் என்று எனக்குத் தோன்றியது.

முகுந்தை நியாபகம் வைத்திருப்பார்களா?

நான் இதனை செய்யலாம் என்று முடிவெடுத்தாலும், கடந்த 8 வருடங்களாக அவரைப் பற்றி நான் பொது வெளியில் பெரிதாக பேசவே இல்லை. அது எனக்கு ஒரு குற்ற உணர்வை தந்தது. ஒரு நேர்காணலில் நிருபர் ஒருவர் என்னிடம் மக்கள் இன்னமும் முகுந்தை நியாபகம் வைத்திருப்பார்களா? என்று கேட்டார். அதற்கு அது அவர்களின் விருப்பம் என்றேன். அதன் பிறகு, நானும் அவரைப்பற்றி வெளியே பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

இந்த வாய்ப்பு வந்த போது, பிரபஞ்சமே நீ முகுந்திற்கு நிறைய செய்ய வேண்டும் என்று சொன்னது போல இருந்தது. இதை அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார் என்று நினைக்கிறேன். அவர் என்னிடம் எப்போதும், நீ முகுந்தின் மனைவி.. ஆகையால், நீ எப்போதும் வலிமையாக இருக்க வேண்டும் என்பார். கடினமான காலங்களை நான் எதிர்கொள்ளும் போது, அதுவே என் நினைவுக்கு வரும்.” என்று பேசினார்.

ஏன் சிவகார்த்திகேயன்?

முகுந்த் கதாபாத்திரத்தில் ஏன் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியிடம் கேட்ட போது, “ முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. அவர் ஒரு சராசரி மனிதனுக்கான அடையாளத்தை அவர் பிரதிபலித்ததால் அவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தேன். இன்னும் 10 வருடம் கழித்து, இன்னும் பெரிய நட்சத்திர அந்தஸ்தில் சிவா இருந்தாலும் கூட, அவருக்கு அந்த சராசரி மனிதனுக்கான அடையாளம் இருக்கும்.” என்று பேசினார்.