Mufasa The Lion King OTT Release: 6000+ கோடி ரூபாய் வசூலித்த முஃபாஸா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
Mufasa The Lion King OTT Release: கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி, 6000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த ஹாலிவுட் அனிமேஷன் படம், ‘முஃபாஸா: தி லயன் கிங்’ ஓடிடியில் வெளியாக உள்ளது. இதன் ரிலீஸ் தேதி குறித்த முழு விவரம் இங்கே!

Mufasa The Lion King OTT Release: ஹாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸில் அதிரடியாக 6000 கோடி வசூல் செய்த அனிமேஷன் படம், ‘முஃபாஸா: தி லயன் கிங்’ ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்தப் படம் இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கு முன்பு வெளியான ‘தி லயன் கிங்’ படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கடந்த ஆண்டு டிசம்பர் 24 அன்று வெளியான இந்தப் படம், இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முஃபாஸாவிற்கு குரல் கொடுத்த நடிகர்கள்
கடந்த ஆண்டு டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தின் ஹிந்தி டப்பிங்கில், ஷாருக்கான், அப்ராம் கான், ஆர்யன் கான், ஸ்ரேயாஸ் தல்படே மற்றும் சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவும், தமிழில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், அசோக் செல்வன், விடிவி கணேஷ், ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, நாசர் உள்ளிட்டோர் குரல் கொடுத்துள்ளனர். முஃபாஸா: தி லயன் கிங் அனிமேஷன் படத்தை பாரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜெஃப் நாதன்சன் கதை எழுதியுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸில் அசத்திய முஃபாஸா
பாரி ஜென்கின்ஸ் இயக்கிய முஃபாஸா படம் மிகப்பெரிய செலவில் தயாரிக்கப்பட்டது. அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகளவில் 6000 கோடி (ரூ. 61,84,75,94,350) வசூல் செய்துள்ளது. எந்த ஓடிடியில், எப்போது இந்தப் படம் ஸ்ட்ரீமிங் ஆரம்பிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இங்கே.
எந்த ஓடிடியில் ஸ்ட்ரீமிங்?
முஃபாஸா படம், ‘தி லயன் கிங்’ படத்தின் முன்னோடிப் படம். சிம்பாவின் தந்தை முஃபாஸா எப்படி ராஜாவானார் என்பதை இந்தப் படம் விவரிக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளது. மார்ச் 26 அன்று இந்தப் படம் ஸ்ட்ரீமிங் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்ற அறிவிப்பு இன்று மார்ச் 12 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
ரெண்ட் இல்லாமல்
முஃபாசா: தி லையன் கிங் திரைப்படம் ஏற்கனவே ரெண்ட் முறையில் அமேசான் பிரைம் வீடியோ, ஆப்பிள் டிவி போன்ற ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங்கில் உள்ளது. இருப்பினும், மார்ச் 26 அன்று ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளது. அதாவது எந்த ரெண்டும் இல்லாமல் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் உள்ள அனைத்து பயனர்களும் இந்தப் படத்தைப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நிம்மதியா வாழ மட்டும் விடுங்களேன்.. மன்றாடிய நடிகை
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்