OTT Hits: கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம்.. ஓடிடியில் வரவேற்பை பெறும் ரீமேக் படம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Hits: கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம்.. ஓடிடியில் வரவேற்பை பெறும் ரீமேக் படம்..

OTT Hits: கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம்.. ஓடிடியில் வரவேற்பை பெறும் ரீமேக் படம்..

Malavica Natarajan HT Tamil
Published Feb 12, 2025 02:52 PM IST

OTT Hits: மலையாள படத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படமான மிசஸ், கூகுளில் அதிகம் தேடப்பட்ட படமாக உள்ளது என ஜீ5 ஓடிடி தளம் கூறியுள்ளது.

OTT Hits: கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம்.. ஓடிடியில் வரவேற்பை பெறும் ரீமேக் படம்..
OTT Hits: கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம்.. ஓடிடியில் வரவேற்பை பெறும் ரீமேக் படம்..

மலையாள ரீமேக்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மலையாள திரைப்படமான தி கிரேட் இந்தியன் கிச்சனின் ரீமேக்காக இந்தியின் மிசஸ் (திருமதி) எனும் திரைப்படம், ஜீ5 ஓடிடியில் நேரடியாக வெளியானது. இந்தப் படம் வெளியான நாள் தொடங்கி பல சாதனைகளை முறியடித்து வருவதாக ஜீ5 தளம் கூறி வருகிறது.

மிசஸ் படத்தின் ரெக்கார்ட்ஸ்

தங்கல் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற சன்யா மல்ஹோத்ரா மிசஸ்(திருமதி) திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஜீ5 ஓடிடியில் தற்போது வெளிவந்துள்ளது.

இந்தப் படம் குறித்து ஜீ5 ஓடிடி தளம் கூறுகையில், "மிசஸ் படம், பிளாக்பஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க" என்றும், இந்தப் படம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படமாக மாறியுள்ளதாகவும் பதிவிட்டுள்ளது. இதுவரை இருந்த சாதனைகள் எல்லாம் இந்தப் படத்தின் மூலம் முறியடிக்கப்படுகின்றதாகவும் கூறியுள்ளது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் இது என்றும் கூறப்படுகிறது. பார்வையாளர்களிடமிருந்து படத்திற்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கிறது என்பதை சொல்ல இந்த பதிவுகள் போதுமானவையாக உள்ளது என படக்குழு கூறியுள்ளது. குறிப்பாக இந்த படத்தில் சன்யா மல்ஹோத்ராவின் நடிப்பு மக்களால் கொண்டாடப்படுகிறது.

மிசஸ் படம்

மிசஸ் படத்தை ஆரத்தி காதவ் இயக்குகிறார். இந்த படம் 2021 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான தி கிரேட் இந்தியன் கிச்சனின் ரீமேக் ஆகும். இந்தப் படம் ஓடிடியில் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் 2023 ஆம் ஆண்டில், தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது ஹிந்தியில் மிசஸ் எனும் பெயரில் வெளியாகி உள்ளது. மேலும் இது ஜீ5 இல் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது.

மிசஸ் கதை

சன்யா மல்ஹோத்ரா, நிஷாந்த் தஹியா மற்றும் கன்வல்ஜீத் சிங் ஆகியோருடன், நடனக் கலைஞராகவும் நடன ஆசிரியராகவும் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை திருமணத்திற்குப் பிறகு எவ்வாறு தலைகீழாக மாறியது என்பதைப் பார்க்கும்.

திருமணத்திற்குப் பிறகு, ஒரு பெண் மாமியார் வீட்டில் எப்படி அவரது வாழ்க்கையை கொண்டு செல்கிறாள். அவள் எந்த அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். இதிலிருந்து வெளியேற இறுதியில், அவள் என்ன முடிவெடுத்தாள் என்பதை மிகவும் அழகாக வெளிப்படுத்தி இருப்பர்.

இப்படம் நியூயார்க் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. வட இந்தியாவில் நடக்கும் கதையை இந்தி ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக படமாக்கப்பட்டது என்றார் இயக்குனர் ஆரத்தி.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.