மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் டீஸர் வெளியீடு! பிக்பாஸ் லாஸ்லியாவுடன் இணையும் யூட்யூப் பிரபலம்!
பிக்பாஸ் லாஸ்லியா யுட்யூப் பிரபலம் நடிகர் ஹரி பாசகருடன் இணைந்து ஹவுஸ்கீப்பிங் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான டீஸர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பலர் திரைத்துறையில் பல படங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மார்க்கெட் போன பழைய நடிகர்களும் கலந்து கொள்வதுண்டு. கடந்த ஏழு சீசன்களாக இதில் பங்கேற்ற ஹரீஷ் கல்யாண், கவின், ஆரி போன்றவர்கள் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் வெற்றிகாரமான இடங்களில் இருந்து வருகின்றனர். அதில் முக்கியாக குறிப்பிடப்பட வேண்டியவர் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்துக் கொண்ட லாஸ்லியா மரியநேசன். இவர் சமீபத்தில் யூட்யூப் பிரபலம் ஹரி பாஸ்கருடன் இணைந்து மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்தவர்.
பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பரீட்சையமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் ஒரு தனியார் செய்தி தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளாராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து பிகபாஷ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவரது குறும்பு பேச்சுக்கும், குழந்தை தனத்துக்கும் நெட்டிசன்களால் அதிகம் விரும்பபட்டார். மேலும் இந்த சீசனில் பங்கேற்ற சக போட்டியாளரான கவின் உடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதி நாட்களில் குடும்பத்தார் வரும் எபிசோட்டில் இவரது தந்தை வந்து இவரை கடுமையாக கண்டித்தார். கவின் உடனான பழக்க வழக்கத்தை மிகவும் கண்டித்து பேசினார். இந்நிகழ்ச்சியை அடுத்து சில மாதங்களில் இவரது தந்தை காலமானார்.