Big Shorts Season 3: கார்த்திக் சுப்புராஜ் முன்னிலையில் குறும்படபோட்டி.. வீட்டுக்கதவை தட்டும் வாய்ப்பு.. முழு விபரம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Big Shorts Season 3: கார்த்திக் சுப்புராஜ் முன்னிலையில் குறும்படபோட்டி.. வீட்டுக்கதவை தட்டும் வாய்ப்பு.. முழு விபரம்!

Big Shorts Season 3: கார்த்திக் சுப்புராஜ் முன்னிலையில் குறும்படபோட்டி.. வீட்டுக்கதவை தட்டும் வாய்ப்பு.. முழு விபரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 09, 2024 02:53 PM IST

Big Shorts Season 3: “மே 22, 2024 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க நினைப்பவர்கள் bigshorts.moviebuff.com இல் பதிவு செய்யலாம். ஜூலை 1, 2024க்குள் தங்கள் Entry-களை சமர்ப்பிக்க வேண்டும்.” - முழு விபரம்!

Big Shorts Season 3: கார்த்திக் சுப்புராஜ் முன்னிலையில் குறும்படபோட்டி.. வீட்டுக்கதவை தட்டும் வாய்ப்பு.. முழு விபரம்!
Big Shorts Season 3: கார்த்திக் சுப்புராஜ் முன்னிலையில் குறும்படபோட்டி.. வீட்டுக்கதவை தட்டும் வாய்ப்பு.. முழு விபரம்!

படைப்பாற்றல் கொண்ட இளைஞர்கள், சினிமாத் துறையின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகொள்ளவும், தங்களின் கனவை நனவாக்கும் விதமாக படங்களை உருவாக்கவும், இது வாய்ப்பளிக்கிறது. கூடவே தாங்கள் எடுத்த படங்களைப் பெரிய திரையில் பார்க்கவும், இந்த போட்டி உதவியாக இருக்கும். 2017-ல் நடந்த இந்த போட்டியின் முதல் சீசனில் வெற்றி பெற்ற படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 40 நகரங்களில் சுமார் 500 திரைகளில் திரையிடப்பட்டு, லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்தது. 

போட்டி விவரங்கள்:

போட்டி மே 22, 2024 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க நினைப்பவர்கள் bigshorts.moviebuff.com இல் பதிவு செய்யலாம். ஜூலை 1, 2024க்குள் தங்கள் Entry-களை சமர்ப்பிக்க வேண்டும். திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் அடங்கிய புகழ்பெற்ற வல்லுநர்கள் குழு, திரைப்படங்களைத் தேர்வுசெய்யும். அவை பொது வாக்களிப்பிற்காக ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஆன்லைன் வாக்களிப்பின் அடிப்படையில், முதல் ஐந்து படங்கள் ஐந்து வாரங்களுக்குப் பெரிய திரையில் திரையிடப்படும். கியூப் சினிமா நெட்வொர்க்கின் பல திரையரங்கு விநியோக மாவட்டங்களில் 500 திரைகளில் இந்த படங்கள் வெளியிடப்படும். அந்த நேரத்தில் Bigshorts -ல் இந்த முதல் ஐந்து படங்கள் பொதுமக்களின் வாக்குகள் மூலம் தரவரிசைப்படுத்தப்படும். இதில் அதிக வாக்குகளைப் பெறும் படம் வெற்றிப்படமாக அறிவிக்கப்படும். மேலும் தகவலுக்கு bigshorts.moviebuff.com

போட்டியின் நடுவர்கள் யார் யார்? 

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் போட்டியின் நடுவர்களாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் எஸ்.யு.அருண்குமார், இயக்குநர் ஹலீதா ஷமீம், எடிட்டர் செல்வா ஆர்.கே, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், எடிட்டர் பிலோமின் ராஜ், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், திரைப்பட விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (சிறப்பு விருந்தினர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வெற்றி பெறும் முதல் 3 போட்டியாளர்களுக்கு டர்மெரிக் மீடியா மற்றும் மூவி பஃப் சார்பில், ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். முதலிடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ. 3 லட்சமும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். வெற்றியாளருக்கு அவர்களின் ஸ்கிரிப்டை டர்மெரிக் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஒரு விநியோக நிறுவனத்திடம் கூறுவதற்கான வாய்ப்பு அமைத்து தரப்படும். 

ஹர்ஷ் ரோஹத்கி பேட்டி

இது குறித்து க்யூப் சினிமா டெக்னாலஜிஸின் தலைமைச் செயல் அதிகாரி ஹர்ஷ் ரோஹத்கி கூறுகையில்,  “ஒவ்வொரு திரைப் படைப்புக்கும் மேலும் உயிரூட்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மூவி பஃப்பின் Big Shorts அதே நோக்கத்தில் நாம் மேலும் ஒரு படி மேலேறுவதற்கான வழியாக  உள்ளது. 

தயாரிப்பு, படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரோடக்ஷன், விநியோகம் உட்பட சினிமாவின் அனைத்து அம்சங்களுக்கும், தொழில்நுட்பத்தை வழங்கும் இடத்தில் Qube செயல்படுகிறது. Big Shorts என்பது அடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு சினிமாவின் அரங்கைத் திறந்துவிடவும், சினிமா சூழலை நல்ல முறையில் வைத்திருக்கவும் ஒரு படியாக இருக்கும்.” என்று பேசினார். 

டர்மெரிக் மீடியாவைச் சேர்ந்த மகேந்திரன் பேசும் போது,  "Big Shorts குறும்படப் போட்டியின் 3-வது சீசனை" மூவி பஃப் நிறுவனத்துடன் இணைந்து வழங்குவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். திரைப்படத்துறையில் திறமையானவர்களைக் கண்டறியும் பணியை நாங்கள் தொடர்ந்து செய்துவருகிறோம். அப்படி ஏற்கெனவே பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அதே பணியை இந்த ஆண்டும் சிறப்பாகச் செய்துமுடிப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று பேசினார்.  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.