2025 தமிழ் சினிமா! காத்திருப்பும் எதிர்பார்ப்புகளும்! ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படங்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  2025 தமிழ் சினிமா! காத்திருப்பும் எதிர்பார்ப்புகளும்! ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படங்கள்!

2025 தமிழ் சினிமா! காத்திருப்பும் எதிர்பார்ப்புகளும்! ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படங்கள்!

Suguna Devi P HT Tamil
Jan 01, 2025 06:00 PM IST

2025 ஆம் ஆண்டு வெளியாக உள்ள படங்களின் பட்டியல் மற்றும் அதிகம் எதிர்பார்ப்பு உள்ள படங்களின் பட்டியல் பின்வருமாறு.

2025 தமிழ் சினிமா! காத்திருப்பும் எதிர்பார்ப்புகளும்! ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படங்கள்!
2025 தமிழ் சினிமா! காத்திருப்பும் எதிர்பார்ப்புகளும்! ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படங்கள்!

கூலி:

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை லோகேஷ் கனகராஜ் எந்த கோணத்தில் காண்பிக்க போகிறார் என்பதே இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. என்னதான் லியோ-வில் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு LCU சரிவர இல்லை என்றாலும், லொகேஷன் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்தே உள்ளனர். தவிர இது LCU-வில் இடம்பெறாது என்றும் இது standalone படம் என்றும் முன்னரே படக்குழு அறிவித்துவிட்டது.

இந்தியன் 3 & தக் லைஃப் :

இந்தியன் 2 வின் மோசமான வரவேற்பு காரணமாக இந்தியன் 3 நெட்ஃபிளிக்சில் நேரடியாக வெளியாக இருப்பதாக தகவல் வந்தது. அதை இயக்குனர் ஷங்கர் முற்றிலும் மறுத்து இந்தியன் 3 திரையரங்கில் வெளியாகும் என்றும் கேம் சேஞ்ச் ரிலீஸ் இருக்கு பின்பு இப்படத்திற்கான அறிவிப்பு தேதி வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.

மணிரத்னம் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா என ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் இருந்தது தக் லைஃப் டைட்டில். சுமார் 38 ஆண்டுகளுக்குப் பின்பு இணைந்த கமல்-மணிரத்னம் கூட்டணியில் சிம்புவும் இணைந்துள்ளார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

GBU & விடாமுயற்சி :

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அன்று வெளிவர இருந்த விடாமுயற்சி படம் தள்ளிப் போவதாக நேற்று லைகா நிறுவனம் அறிவித்தது AK ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இது முன்னரே தெரிவித்து இருந்தால் அஜித் குமாரின் குட் பேக் அக்லி திரைப்படமும் சியான் விக்ரமின் வீர தூர சூரன் 2 திரைப்படமும் பொங்கல் அன்று வர படக்குழு ஆயத்தப்பட்டிருக்கும். தற்போது அதற்கும் வாய்ப்பு இல்லாததால் பொங்கல் அன்று எந்த பெரிய நடிகர் திரைப்படமும் வெளியாகாத சூழல் உருவாகியுள்ளது.

தளபதி 69:

விஜய்யின் கடைசி திரைப்படமாக கூறப்படும் அ. வினோத் படத்திற்கு சொல்லி அடித்த கில்லி போல் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டே படபிடிப்பு தொடங்கப்பட்டது. தனது பார்ட் டைம் அரசியலை கைவிட்டு முழு நேர அலசி அரசியலுக்கு வர வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் ஒரு பக்கம் எச்சரித்தும் மீண்டும் அவர் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்களும் வேண்டியும் உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் முடியும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

ரெட்ரோ & சூர்யா 45:

நீண்ட காலமாக ஒரு தியேட்டர் வீட்டுக்கு காத்துக்கொண்டிருக்கும் சூர்யாவிற்கு கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ படம் பதில் தரும் என்று ரசிகர்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இது தவிர நடிகர் விஜய் ஓகே செய்த ஆர் ஜே பாலாஜியின் கதையை நடிக்க முடியாமல் போகவே அது சூர்யாவின் கைக்கு சென்று தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இட்லி கடை & NEEK:

அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ள தனுஷிற்கு இந்த ஆண்டு வெளியாக வாய்ப்பிருக்கும் திரைப்படங்களாக இருப்பது அவரை இயக்கி நடிக்கும் படங்களான இட்லி கடை மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்கள் ஆகும். தனது பூர்வீகமான தேனி மாவட்டத்தை சுற்றி வலம் வந்து எடுக்கும் இட்லி கடை திரைப்படமாக இருக்கட்டும் கோல்டன் ஸ்பேரோ சிங்கிளால் மக்களுக்கு தெரிய வந்த NEEK படமும் எதிர்பார்ப்பு பட்டியலில் இருக்கின்றன.

சிவகார்த்திகேயன்:

இந்தியில் சல்மான் கான் படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கம் திரைப்படமும் இவ்வாண்டு ரிலீஸ் பட்டியலில் இருக்கின்றன. இது தவிர சுதா கொங்கராவின் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க இருப்பதும் எதிர்பார்ப்பை எகிர வைத்திருக்கின்றன.

இது தவிர மிஷ்கின் இயக்கத்தின் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் திரைப்படமும் இயக்குனர் ஷங்கரின் தெலுங்கு படமான கேம் சேஞ்சர் திரைப்படமும் பாலாவின் வணங்கான் திரைப்படமும் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் திரைப்படமும் சித்தா படப்புகழ் SU அருண்குமார் இயக்கத்தில் விக்ரமின் வீர தீர சூரன் 2 படமும் லவ் இன்சூரன்ஸ்

கம்பெனி எனும் திரைப்படமும் திரைப்படமும் ரிலீஸ் ஆக இருக்கின்றன. மேற்படி கூறியது எல்லாம் பிக் பட்ஜெட் திரைப்படங்களே. படப்பிடிப்பு முடிந்து வெளியாகாமல் இருக்கும் & படபிடிப்பில் இருக்கும் சிறுபட்ஜெட் திரைப்படங்களுக்கும் இவ்வாண்டு அறிமுகமாகும் இயக்குனரின் திரைப்படங்களுக்கும் எதிர்பார்ப்புகளும் வாழ்த்துகளும் !

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.