Bigboss Tamil 8: இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ்! டைட்டில் வின்னர் ஆவாரா முத்துக் குமரன்? பெருகும் ஆதரவு!
Bigboss Tamil 8: சமூக வலைதளங்களில் போட்டியாளர் முத்துக்குமரனுக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவரே டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் முத்துக்குமரனே வெற்றியாளராக வருவதற்கு தகுதி உடையவர் எனவும் கூறி வருகின்றனர்.

தமிழ் ரசிகர்களின் மிகவும் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இன்று வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய உள்ளது. மேலும் பிக் பாஸ் டைட்டில் வின்னராக யார் வருவார் என்று கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பான விவாதங்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் போட்டியாளர் முத்துக்குமரனுக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவரே டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் முத்துக்குமரனே வெற்றியாளராக வருவதற்கு தகுதி உடையவர் எனவும் கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 8
கடந்த பிக் பாஸ் சீசன்களை காட்டிலும் இந்த பிக் பாஸில் பல புதுவிதமான செயல்முறைகள் கொண்டுவரப்பட்டன. புதிய விதிகள், புதிய வீடு என போட்டியாளர்களுக்கு முழுக்க முழுக்க என அனைத்தும் புதியதாக இருந்தது. குறிப்பாக கடந்த ஏழு சீசன்களில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இல்லாமல் தற்போது விஜய் சேதுபதியின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளிலேயே ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி இருவேறு அணிகள் பிரிக்கப்பட்டன. இதுவே போட்டியாளர்களுக்கு இடையே சண்டை வரக் காரணமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸின் கடைசி வாரத்தில் போட்டியாளர்கள் உள்ளனர்.
பணப்பெட்டி எடுப்பதில் கூட இந்த முறை போட்டியாளர்களுக்கு புது விதமான வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. பெட்டியை குறிப்பிட்ட தூரத்தில் வைத்து விட்டு அதனை எடுத்து மீண்டும் வீட்டிற்குள் வரும் போட்டியாளரே வெற்றி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் ஜாக்குலின் தொற்று போட்டியை விட்டு வெளியேறினார்.
பிஆர் டீம் வைத்த சௌந்தர்யா
கடந்த சீசனில் இருந்தே போட்டியாளர்கள் பிஆர் டீம் வைத்து சமூக வலைத் தளங்களில் சப்போர்ட் வாங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. அதிலும் கடந்த சீசனின் வெற்றியாளரான அர்ச்சனா பிஆர் செய்து தான் வெற்றி பெற்றதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த சீசனின் சௌந்தர்யாவும் பி ஆர் டீம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது உண்மை எனவும் பலர் தெரிவித்து வருகின்றனர். எந்த வேலையும் செய்யாமல் சௌந்தர்யா உள்ளே இருந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
முத்துக்குமரன் டைட்டில் வின்னரா?
இன்னும் இரண்டே நாட்களில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என அனைவருக்கும் தெரிந்து விடும். ஆனால் சமூக வலைதளங்களிலும் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என அடிக்கடி ஒருவரின் பெயர் அடிபட்டு வருகிறது. அவர்தான் முத்துக்குமரன், போட்டியின் ஆரம்பம் முதலே மிகவும் நேர்மையாக விளையாடுவதாக தெரியும் முத்துக்குமரன் சில சமயங்களில் தவறுகள் செய்வதாக இருந்தாலும் அதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்டு அந்த தவறையும் திருத்திக் கொள்வதாகவும் தெரிந்தது.
இந்நிலையில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக வருவார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் அவருக்கு இருக்கும் ஆதரவு அதை உறுதியும் படுத்தியுள்ளது. மேலும் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் செல்லும்போதும் முத்துக்குமரனே ஒரு வெற்றியாளனுக்கு தகுதியான போட்டியாளர் எனவும் கூறி வந்தனர். குறிப்பாக ப்ரீசிங் டாஸ்க் எனப்படும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளே செல்லும் டாஸ்கிலும் மற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினரும் முத்துக்குமரனையே பாராட்டி வந்தனர். முத்துக்குமரன் இந்த பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் இரண்டு நாட்கள் கழித்து உண்மை நிலவரம் என என்பது தெரியும்.

டாபிக்ஸ்