Monalisa: காந்த கண்கள் செய்த சம்பவம்.. மகாகும்பமேளாவில் வைரலான சிறுமிக்கு பட வாய்ப்பு! - வீடியோ உள்ளே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Monalisa: காந்த கண்கள் செய்த சம்பவம்.. மகாகும்பமேளாவில் வைரலான சிறுமிக்கு பட வாய்ப்பு! - வீடியோ உள்ளே!

Monalisa: காந்த கண்கள் செய்த சம்பவம்.. மகாகும்பமேளாவில் வைரலான சிறுமிக்கு பட வாய்ப்பு! - வீடியோ உள்ளே!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 31, 2025 03:31 PM IST

Monalisa: மகாகும்பமேளாவில் வைரலான 16 வயதான மோனாலிசா போஸ்லே, வரவிருக்கும் ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Monalisa: காந்த கண்கள் செய்த சம்பவம்.. மகாகும்பமேளாவில் வைரலான சிறுமிக்கு பட வாய்ப்பு! - வீடியோ உள்ளே!
Monalisa: காந்த கண்கள் செய்த சம்பவம்.. மகாகும்பமேளாவில் வைரலான சிறுமிக்கு பட வாய்ப்பு! - வீடியோ உள்ளே! (Instagram/@SanojMishra)

அற்புதமான கண்கள்

ஆம், தன்னுடைய அற்புதமான கண்கள் மூலம் மகாகும்பமேளாவில் கவனம் பெற்றவர் மோனாலிசா. இவரை தன்னுடைய ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்  செய்திருக்கிறார் அந்தப்படத்தின் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா. 

இது தொடர்பாக அவர் மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தை சந்தித்து பேசி இருக்கிறார். இது தொடர்பான வீடியோவையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். முன்னதாக, சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் வெளியான  ‘தி டைரி ஆஃப் வெஸ்ட் ஃபெங்கால்’ படம் பரவலான கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த வாய்ப்பின் வாயிலாக கார்கோன் மாவட்டத்தின் மகேஸ்வரியில் பூ விற்றுக்கொண்டிருந்த மோனாலிசா, பிப்ரவரி மாதம் ஷூட்டிங் செல்ல இருக்கிறார். இருப்பினும், மோனாலிசாவும், சனோஜ் மிஸ்ரா பேசியவை தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. 

வீடியோவைப் பாருங்கள்:

யார் இந்த மோனாலிசா? 

நர்மதா ஆற்றின் அமைதியான கரையில் உள்ள கிலா காட்டில் பல ஆண்டுகளாக மாலைகளை விற்று பிழைப்பு நடத்தி வந்த இவர், உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்து வரும் மகாகும்பமேளாவில் மக்களிடம் ருத்ராட்ச மாலைகளை விற்றுக்கொண்டிருந்தார். 

அப்போது அவரை புகைப்படம் எடுத்து கலைஞர் ஒருவர் சமூகவலைதளங்களில் வெளியிட, அந்தப்புகைப்படம் வைரலானது. இது அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 

மோனாலிசாவின் உடல் அம்சங்கள், அவரது வசீகரிக்கும் கண்கள் பயனார்களுக்கு மிகவும் பிடித்து விட, அவர் ஒரே நாளில் சோசியல் மீடியா சென்சேஷனாக மாறினார். அவரது புகைப்படத்தை பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தனர். இந்த பிரபலத்தின் வாயிலாக தற்போது அவர் படத்தில் கமிட் செய்யப்பட்டு இருக்கிறார். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.