தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Mollywood Movies That Play Major Role In 2024

Mollywood Movies: இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த மூன்று சூப்பர் ஹிட் மாலிவுட் படம்!

Aarthi Balaji HT Tamil
Mar 31, 2024 10:42 AM IST

இந்திய சினிமாவைக் கவர்வதை மலையாளத் திரையுலகம் மறந்ததில்லை . அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு வெளியான மூன்று மாலிவுட் படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்தன.

பிரேமாலு
பிரேமாலு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய சினிமாவைக் கவர்வதை மலையாளத் திரையுலகம் மறந்ததில்லை . அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு வெளியான மூன்று மாலிவுட் படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்தன.

பிரேமாலு

மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பிரேமாலு மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இப்படத்தின் தெலுங்கு உரிமையை ஷோயிங் பிசினஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இது திரைப்பட தயாரிப்பாளர் எஸ்எஸ் ராஜமௌலியின் மகன் எஸ்எஸ் கார்த்திகேயாவுக்கு சொந்தமானது. பிரேமாலுவின் தமிழ் பதிப்பு மார்ச் 15 ஆம் தேதியும், தெலுங்கு பதிப்பு மார்ச் 8 ஆம் தேதியும் வெளியானது.

கிரீஷ் ஏ.டி இயக்கத்தில், பிரேமாலுவில் நஸ்லென் கே கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

கிரீஷ் இயக்கிய பிரேமாலு படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படம் தமிழகத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உள்ளது.

பிரமாயுகம்

பிரமாயுகம் படத்தை பிரபல நடிகர் மம்முட்டி நடிப்பில் கருப்பு வெள்ளையில் வெளியான படம் . ராகுல் சதாசிவன் இயக்கிய இந்தப் படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மஞ்சும்மல் பாய்ஸ்

மலையாளத்தில் சர்வைவல் த்ரில்லரான இதில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, லால் ஜூனியர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிதம்பரம் எஸ் பொதுவாள் இயக்குகிறார், ஸ்ரீ கோகுலம் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து பரவா பிலிம்ஸ் பேனரின் கீழ் சௌபின் ஷாஹிர் தயாரித்துள்ளார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த வருடத்தின் சிறந்த படமாக மஞ்சும்மல் பாய்ஸ் வந்து உள்ளது என்றால் மிகையாகாது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இப்படம் 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை கடந்து உள்ளது.

நிஜ வாழ்க்கை, முற்றிலும் மாறுபட்ட, பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் இது. இயக்குனர் ப்ளெஸ்ஸி தனது உடல் எடையை சுமார் 98 கிலோவிலிருந்து 68 கிலோவாக குறைத்து ஒரு சிறந்த ART படத்தை கொடுத்துள்ளார். ஏற்கனவே புகழின் உச்சியில் இருக்கும் நடிகர் பிருத்விராஜ் இந்த படத்தின் மூலம் வேறு பரிமாணத்திற்கு சென்றுவிட்டார் என்றே கூறலாம். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்