'பிள்ளைகளின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடமாட்டேன்.. பிரிதிவிராஜுக்கு என்னை யூஸ் செய்ய தெரியும்’: மோகன் லால்
'பிள்ளைகளின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடமாட்டேன்.. பிரிதிவிராஜுக்கு என்னை யூஸ் செய்ய தெரியும்’ என நடிகர் மோகன் லால், பிரபல தொகுப்பாளர் கோபி நாத்திடம் பேட்டியளித்திருக்கிறார்.

'பிள்ளைகளின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடமாட்டேன்.. பிரிதிவிராஜுக்கு என்னை யூஸ் செய்ய தெரியும்’: மோகன் லால்
பரோஸ் என்கிற படத்தை முதன்முதலாக மலையாள நடிகர் மோகன் லால் இயக்கி நடித்திருக்கிறார். இப்படம் தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகிறது.
அப்படம் குறித்தான புரொமோஷனில் ஈடுபட்டிருக்கும் நடிகர் மோகன் லால், நீயா நானா கோபிநாத்துக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு இதோ..
''உங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பெண் பிள்ளைகள் தான் அப்பாவுக்கு ரொம்ப நெருக்கம் என்று சொல்வார்கள். உங்கள் வீட்டில் எப்படி?
இரண்டு பேரையுமே பிடிக்கும். இரண்டு பேருக்கும் என்னைப் பிடிக்கும். அப்பா பிள்ளைகள் மாதிரி கிடையாது. நண்பர்கள் மாதிரி இருப்போம். எல்லோருக்குமே ஒரு மரியாதை இருக்கும். நானும் அந்த மரியாதையுடன் இருப்பேன். அவங்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் நான் தலையிட மாட்டேன். சின்னப் பசங்கள் ஒன்னும் இல்லை. ஒரு ஆளுக்கு 32. இன்னொருத்தவங்களுக்கு 27. நல்ல முறையில் படிச்சிருக்காங்க. அவங்களுக்கு நல்ல வாழ்க்கை இருக்கு.நான் அதனால் தலையிடுவதில்லை.
