Mohan G on Vetrimaaran: உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்.. உங்க சாதியில ட்ரை பண்ணுங்க.. பிராமணப்பொண்ண’- மோகன் ஜி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mohan G On Vetrimaaran: உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்.. உங்க சாதியில ட்ரை பண்ணுங்க.. பிராமணப்பொண்ண’- மோகன் ஜி

Mohan G on Vetrimaaran: உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்.. உங்க சாதியில ட்ரை பண்ணுங்க.. பிராமணப்பொண்ண’- மோகன் ஜி

Kalyani Pandiyan S HT Tamil
Jan 27, 2025 09:21 PM IST

Mohan G on Vetrimaaran: பிராமணப்பெண்ணின் அப்பாவும், அம்மாவும் பழைய கால பிராமணக் குடும்ப அப்பா, அம்மா போல சித்தரிப்பது ட்ரெண்டிங்கில் இல்லை. உங்கள் சொந்த ஜாதி பெண்களிடம் இதை முயற்சியுங்கள். - மோகன் ஜி

Mohan G on Vetrimaaran: உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்.. உங்க சாதியில ட்ரை பண்ணுங்க.. பிராமணப்பொண்ண’- மோகன் ஜி
Mohan G on Vetrimaaran: உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்.. உங்க சாதியில ட்ரை பண்ணுங்க.. பிராமணப்பொண்ண’- மோகன் ஜி

இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பா.ரஞ்சித் பதிவு

இந்தப்படத்தை அண்மையில் பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில், ‘பேட் கேர்ள் திரைப்படத்தைப் பார்த்தேன். உண்மையில் மிகவும் துணிச்சலான, புத்துணர்ச்சியான திரைப்படம். இம்மாதிரியான கதையை படமாக்கியதற்காகவே, வெற்றிமாறன் அதிகமான பாராட்டிற்கு தகுதியானவர். இந்தத்திரைப்படம் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களையும், சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் புதிய சினிமா பாணியில் கூறியிருக்கிறது. வாழ்த்துகள் வர்ஷா. அஞ்சலி சிவராமன் சிறப்பாக நடித்திருக்கிறார்.’ என்று பதிவிட்டு இருந்தார்.

மோகன் ஜி விமர்சனம்

இந்தப்பதிவை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்ட மோகன் ஜி. ‘ ஒரு பிராமணப்பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது என்பது இந்தக்கூட்டத்திற்கு எப்போதும் தைரியமான, புத்துணர்ச்சியான திரைப்படமாகத்தான் இருக்கும். வெற்றிமாறன், அனுராக் ஆகியோரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும். பிராமணப்பெண்ணின் அப்பாவும், அம்மாவும் பழைய கால பிராமணக் குடும்ப அப்பா, அம்மா போல சித்தரிப்பது ட்ரெண்டிங்கில் இல்லை. உங்கள் சொந்த ஜாதி பெண்களிடம் இதை முயற்சியுங்கள். முதலில் உங்கள் சொந்த குடும்பத்திற்கு அதை வெளிப்படுத்துங்கள்’ என்று பதிவிட்டு இருக்கிறார். நடிகை கஸ்தூரியும் இதே கருத்தை முன் வைத்திருக்கிறார்.

பேட் கேர்ள் பற்றி

அமித் திரிவேதி படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், ராதா ஸ்ரீதர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்தப்படம் ஜனவரி 31, பிப்ரவரி 1, 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.