Keeravaani: பத்மஸ்ரீ விருது பெற்ற கீரவாணி
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து இசையமைப்பாளர் கீரவாணி பத்மஸ்ரீ விருது பெற்றார்.

ஆஸ்கார் விருது பெற்றவரும், புகழ்பெற்ற இசை அமைப்பாளருமான எம். எம். கீரவாணி இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்று ள்ளார் . குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கையிலிருந்து விருதை ராஷ்டிரபதி பவனில் பெற்று கொண்டார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விருதை பெற கீரவாணி முழுக்க கருப்பு உடையில் சென்று இருந்தார்.இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 106 பேருக்கு மத்திய பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. இருவருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் கிடைத்தன. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப்ஸ் மற்றும் ஆஸ்கார் விருதுகளை வென்ற கீரவாணிக்கு தற்போது பத்மஸ்ரீ விருதும் கிடைத்துள்ளது. இந்நிகழ்ச்சியில், கீரவாணி இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து, தனது ஆசிரியர்களை நினைவு கூர்ந்தார்
இந்த ஆண்டு 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன. பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மறைந்துவிட்டதன் காரணமாக அவர்களின் உறவினர்களிடம் விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்