Actress Rashmika Mandanna: நான் நடிகை ராஷ்மிகாவ மிரட்டல.. சர்ச்சைக்கு விளக்கம் அளித்த எம்எல்ஏ
Actress Rashmika Mandanna: தான் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு பாடம் கற்பிக்க உள்ளதாக கூறிய வார்த்தைகள் தவறாக திரித்து பரப்பப்படுவதாக எம்எல்ஏ ரவிக்குமார் கவுடா கனிகா விளக்கமளித்துள்ளார்.

Actress Rashmika Mandana: நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு பாடம் கற்பிப்பதாக கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா கனிகா முன்னதாக பேசியிருந்தார். இந்த வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர், இந்த வார்த்தைகள் குறித்து ஏஎன்ஐக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா குறித்து எம்எல்ஏ கருத்து
"நான் ராஷ்மிகா மந்தனாவிற்கு ஒரு பாடம் கற்பிப்பேன் என்று சொன்னபோது, வாழ்க்கைப் பாடங்களைப் பற்றித்தான் சொன்னேன். ஆனால் நான் அவரைத் தாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.அவர் நடிகையாக மாறிய பின் ஏறிய ஏணியை உதைக்கக் கூடாது என்று தான் சொன்னேன்" என்று கூறியிருக்கிறார்.
மேலும், தனது கருத்துக்கள் நடிகைக்கு தன்னை வளர்த்த மாநிலத்தை மதிப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதற்காகவே கூறியதாகவும் அவர் பேசியுள்ளார். "எங்கள் மாநில நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டபோது ரஷ்மிகா மந்தனா வரவில்லை. அதனால் நீங்கள் எங்கள் மாநில உணவை சாப்பிட்டு வளர்ந்தீர்கள், எனவே அதற்காக எழுந்து நில்லுங்கள் என்று நான் அவரிடம் சொன்னேன்," என்றும் அவர் கூறினார்.
தனிப்பட்ட விமர்சனம் இல்லை
அவரை ஒருபோதும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது தனது நோக்கமல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார். "ராஷ்மிகா மந்தனாவின் படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். நான் என் வார்த்தைகளில் உறுதியாக இருக்கிறேன். நமது மாநிலம், நமது நிலம் மற்றும் கன்னட மொழி மதிக்கப்பட வேண்டும்" என்று கவுடா மேலும் கூறினார்.
எம்எல்ஏ என்ன சொன்னார்?
கர்நாடகாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கான அவரது அழைப்பை ராஷ்மிகா மந்தனா நிராகரித்ததாக தெரிகிறது. இதனால், அவர், பேசிய வார்த்தைகஶ் சர்ச்சையைக் கிளப்பியது.
இதைத் தொடர்ந்து எம்எல்ஏ ரவி தனது விரக்தியை வெளிப்படுத்தினார், ராஷ்மிகா, கன்னட படமான கிரிக் பார்ட்டி மூலம் கர்நாடகாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினாலும், மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் மொழியை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். "எனக்கு கர்நாடகா எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை, எனக்கு நேரமும் இல்லை" என்று கூறியதாகவும் சொன்னார்.
கொடவா தேசிய கவுன்சில் கண்டனம்
இந்தக் கருத்துகளைத் தொடர்ந்து, ராஷ்மிகா உறுப்பினராக உள்ள கொடவா தேசிய கவுன்சில் (KNC), நடிகையின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியது. இந்தக் கருத்துக்களுக்கு கவுன்சில் அதிருப்தி தெரிவித்ததுடன், ராஷ்மிகாவிற்கு துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதால், அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தது.
அதிகரித்து வரும் பதற்றத்திற்கு பதிலளிக்கும் விதமாக, தலைவர் நாச்சப்பா தலைமையிலான கொடவா தேசிய கவுன்சில்,ராஷ்மிகாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களைக் கண்டித்ததுடன், கொடவா பழங்குடியினத்தைச் சேர்ந்த நடிகையான ரஷ்மிகா, இந்தியத் திரைப்படத் துறையில் தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதை வலியுறுத்தி பேசியது.
பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை
மேலும், "கலை விமர்சனத்தின் தன்மையை அறியாத சில நபர்கள், நடிகையை குறிவைத்து துன்புறுத்தி வருகின்றனர்" என்றும் நச்சப்பா பேசியுள்ளார். ராஷ்மிகா மந்தன்னாவின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கொடவா சமூகத்தினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வர் இருவரையும் வலியுறுத்தியுள்ளனர்.
ராஷ்மிகாவிற்கு உரிமை உண்டு
அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரியும் சமூகத்தால் ஒரு முறையான கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. மற்ற எந்தவொரு தனிநபரைப் போலவே ராஷ்மிகா மந்தனாவும் தனது சொந்தத் தேர்வுகளைச் செய்ய உரிமை உண்டு என்றும், மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க யாரும் கட்டாயப்படுத்தப்படக்கூடாது என்றும் அந்தக் கடிதம் வலியுறுத்தியது.
அந்த அறிக்கையில், "அவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, தனது சொந்த தேர்வுகளைச் செய்யும் உரிமையைக் கொண்ட ஒரு தனிநபர். மற்றவர்களின் எதிர்பார்ப்புகள் அல்லது அறிவுறுத்தல்களுக்கு இணங்க யாரும் கட்டாயப்படுத்தப்படக்கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.
ராஷ்மிகாவின் படங்கள்
வேலை விஷயத்தில், ராஷ்மிகா மந்தனா கடைசியாக பிளாக்பஸ்டர் படமான புஷ்பா 2: தி ரூல் மற்றும் சாவா ஆகியவற்றில் காணப்பட்டார். இவை இரண்டும் குறிப்பிடத்தக்க வணிக வெற்றியைக் கண்டன. எதிர்காலத்தில், ராஷ்மிகா பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் சிக்கந்தர் படத்தில் நடிக்க உள்ளார். பின் அவர் நடிகர் தனுஷுடன் குபேரா மற்றும் ஆயுஷ்மான் குரானாவுடன் தாமா படத்திலும் நடித்து வருகிறார்.

டாபிக்ஸ்