பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தும் மிஸ் வேர்ல்ட் 2025.. ஓபால் என்ன சொன்னார் தெரியுமா?
மிஸ் வேர்ல்ட் 2025 ஓபால் சுசதா, பாலிவுட் குறித்து சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இந்தித் திரைப்படங்கள் மீது அவர் கொண்டிருக்கும் ஈர்ப்பையும், இந்தியாவின் விருந்தோம்பல் குறித்தும் அவர் கூறியிருப்பதைப் பாருங்கள்.

உலக அழகி ஓபால் சுசதா, பாலிவுட் மீது தனது ஈர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். தாய்லாந்தைச் சேர்ந்த இந்த மிஸ் வேர்ல்ட் 2025, இந்தித் திரைப்படங்கள் குறித்து சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் விருந்தோம்பல் குறித்தும் அவர் பேசியுள்ளார். மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றதில் தனக்கு மிகுந்த பெருமை எனவும் அவர் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், தனது இந்தியப் பயணம் குறித்து, "நிச்சயமாக இந்தியாவுக்கு மீண்டும் வருவேன்" என்று கூறியுள்ளார்.
நிச்சயமாக நடிப்பேன்
பாலிவுட் திரைப்படங்கள் குறித்து ஓபால் சுசதா கூறியதாவது: "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மிகுந்த பெருமையாக உள்ளது. தாய்லாந்துக்கு முதல் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றது மிகுந்த மரியாதையாக உள்ளது. என் நாட்டு மக்களை பெருமைப்படுத்தியுள்ளேன் என்று நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால், பாலிவுட் படங்களில் நடிக்க விரும்புகிறேன். அது ஒரு அற்புதமான வாய்ப்பு" என்று ஓபால் கூறியுள்ளார். அவரது கருத்துகளைக் கொண்டு பார்க்கும்போது, பாலிவுட் மீது அவர் கொண்டிருக்கும் ஈர்ப்பு தெளிவாகிறது. இந்த நிலையில், விரைவில் ஒபாலின் நடிப்பை இந்தித் திரைப்படங்களில் காண வாய்ப்புள்ளது.