Cinema Special: தமிழில் வெளியான முதல் முழு நீள நய்யாண்டி திரைப்படம்..வேற லெவல் ட்ரோலிங்
Cinema Special: தமிழில் வெளியான முதல் முழு நீள நய்யாண்டி திரைப்படமாக இருந்து வரும் தமிழ்ப்படம் என்ற படத்தில் மிர்ச்சி சிவா, அனைத்து தமிழ் சினிமா நடிகர்களையும் சகட்டு மேனிக்கு ட்ரோல் செய்திருப்பார்,

ஸ்பூஃப் மூவி என்று சொல்லப்படும் பிற சினிமக்கள் அல்லது பிற சினிமாக்களின் கதைகள், கதாபாத்திரங்கள் அல்லது நிஜமான நிகழ்வுகளை நய்யாண்டி செய்து சித்தரிக்கப்படும் படங்கள் என்பது காலங்கலமாக இருந்து வருகிறது. ஹாலிவுட் சினிமாக்களில் இந்த ஸ்பூஃப் படங்கள் என்பது 1900களின் தொடக்கத்தில் இருந்து இருந்து வருகிறது. ஆனால் இந்திய சினிமாக்களை பொறுத்தவரை இந்த கான்செப்ட் என்பது படைப்பாளிகளை பெரிதும் கவராத விஷயமாகவே இருந்துள்ளது.
முழு நீளமாக ஸ்பூஃப் படங்கள் என்பது இந்த சினிமாக்களில் அதிக அளவில் வராத போதிலும், குறிப்பிட்ட காட்சிகள் அல்லது பாடல்கள் என ஒரு போர்ஷன் அளவில் நய்யாண்டி செய்து உருவாக்கப்படும் காட்சிகளுக்கு வரவேற்பு இருந்துள்ளது. அந்த வகையில் பிளாக் அண்ட் படங்கள் காலம் தொட்ட சில படங்களில் குறிப்பிட்ட சில காட்சிகளை நய்யாண்டி செய்து ரசிகர்களை மகிழ்விக்கும் பாணியானது இருந்து வந்துள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு புதுமைகளால் தமிழ் சினிமாவில் தன்னை தக்கவமைத்து கொண்ட நிலையில், 2000ஆவது ஆண்டுக்கு பின்னர் நடந்த புதுமைகளில் ஒன்றாக தமிழில் நேரடியாக வந்து முதல் ஸ்பூஃப் சினிமா இருந்துள்ளது.
அந்த வகையில் தமிழ் சினிமாக்களின் பல ஆண்டு பாரம்பரியத்தில் பின்பற்றப்படும் விஷயங்களையே கதைக்களமாக வைத்து, தமிழில் முதலில் வந்த முழு நீள ஸ்பூஃப் படமாக இருப்பது 2010இல் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பார்த்த தமிழ்ப்படம் தான்.
டைட்டில் முதல் முடிவு வரை கிண்டல் தான்
இந்த படத்தின் தலைப்பை தமிழ்ப்படம் என்று வைத்ததன் மூலம், தமிழ் சினிமாக்களில் ரசிகர்களை மனதில் வெகுவாக பதிந்த காட்சிகள், கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், செண்டிமெண்ட் என ஒன்று விடாமல் டைட்டில் தொடங்கி, முடிவு வரை கிண்டல் செய்திருப்பார்கள். பாடலாசிரியரும், விளம்பர பட இயக்குநருமான சி.எஸ். அமுதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவாவுடன், மறைந்த நடிகர் இயக்குநர் மனோபாலா, நடிகர்கள் எம்.எஸ். பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி, பறவை முனியம்மா உள்பட பலரும் தோன்றி படம் முழுக்கு லூட்டி அடித்திருப்பார்கள்.
ரசிகர்களுக்கு புதுவித அனுபவம்
ஹாலிவுட் சினிமாக்களில் எக்கச்சக்மான ஸ்பூஃப் படங்கள் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. அது குறிப்பாக ஹாலிவுட் பேயப்படங்களை எல்லால் ட்ரோல் செய்யும் விதமாக வந்த ஸ்கேரி மூவி சீரிஸ் படங்கள் மிக பிரபலம். பேய்களை நய்யாண்டி செய்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் பயத்தையும், படபடப்பையும் தருவதற்கு பதிலாக வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக இருக்கும். அதுபோல் தமிழ்ப்படம், தமிழில் சூப்பர் ஹிட்டான படங்களின் காட்சிகள், தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள், பிரபலமான பாடல்கள், விளம்பரங்கள் என பல்வேறு விஷயங்களை வைத்து ட்ரோல் செய்திருப்பார்கள்.
ரிலீஸுக்கு முன்னரே பல்வேறு சூப்பர் படங்களில் காட்சிகளை நினைவுபடுத்தும் விதமாக போஸ்டர் வெளியீட்டு படம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தினர். படங்கள் வரும் சீன்களை போல் பாடல்களையும் ட்ரோல் செய்வதையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமா பாடல்களில் வரும் ஹம்மிங்கை வைத்தே, பாடல் வரிகள் எதுவும் இல்லாமல் அழகான மெலடி பாடலை உருவாக்கியிருந்தார்.
ஹீரோவின் பில்டப், இண்டோ பாடல், ஹீரோ டிரான்ஸ்பர்மேஷன் பாடல் என பல விஷயங்களில் புதுமை புகுத்தி ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தந்திருப்பார்கள்.
தமிழ்ப்படம் இரண்டாம் பாகம்
இந்த படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பால் தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்தை தமிழ்ப்படம் 2.0 என்ற பெயரில் உருவாக்கி 2018இல் வெளியிட்டனர். இரண்டாம் பாகம் கதையானது தமிழில் வந்த போலீஸ் கதைகளின் சுவாரஸ்ய விஷயங்களை ட்ரோல் செய்யும் விதத்தில் உருவாக்கி கலகலப்பூட்டியிருப்பார்கள்.

டாபிக்ஸ்