தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Mirchi Shiva Starrer Soodhu Kavvum 2 Teaser Unveiled

Soodhu Kavvum 2 Teaser:"பொண்ணுகளோடு கற்பனைல தான் நிம்மதியா வாழ முடியும்" - மிர்ச்சி சிவா நடிப்பில் சூது கவ்வும் 2 டீசர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 23, 2024 03:59 PM IST

விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடிக்க, சூது கவ்வம் 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் சேதுபதி தவிர முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இந்த பாகத்திலும் இருப்பதாக தெரிகிறது.

மிர்ச்சி சிவா நடித்திருக்கும் சூது கவ்வும் 2 பட டீஸர் வெளியீடு
மிர்ச்சி சிவா நடித்திருக்கும் சூது கவ்வும் 2 பட டீஸர் வெளியீடு

ட்ரெண்டிங் செய்திகள்

இதைதத்தொடர்ந்து 11 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சூது கவ்வும் 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ளார். அத்துடன் முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இந்த பாகத்திலும் நடித்துள்ளார்கள்.

படத்துக்கு திரைக்கதை எழுதி, எஸ்ஜே அருண் இயக்கியுள்ளார். எட்வின் லூயிஸ் விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தை தயாரித்த சி.வி. குமார் இந்த பாகத்தையும் தயாரித்துள்ளார்.

சூதுகவ்வும் 2 டீசர்

இந்த படத்தின் டீசரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். முதல் பாகத்துடன் தொடர்புபடுத்தும் விதமாக பல்வேறு காட்சிகள் இந்த பாகத்திலும் இடம்பிடித்துள்ளன. முதல் பாகத்தை போல் இந்த பாகத்தையும் கோடை விடுமுறை விருந்தாக ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக் காமெடி படம்

சூதுகவ்வும் பிளாக் காமெடி படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஷார்கட்டில் பணத்தை சம்பாதிக்க நினைக்கும் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அமைச்சர் மகனாக வரும் கருணாகரன் ஆகியோர் சந்திக்கும் பிரச்னைகளே படத்தின் கதையாக அமைந்துள்ளது.

இரண்டாவது பாகம் படமும் அதேபோன்றதொரு கதையம்சத்தில் உருவாகி இருப்பதாக தெரிகிறது. மிர்ச்சி சிவாவின் சில டிரேட்மார்க் காமெடிகளும் படம் முழுவதிலும் இடம் பெறும் என கூறப்படுகிறது.

டீசர் காட்சியில் "பொண்ணுகளோடு கற்பனைல தான் நிம்மதியா வாழ முடியும்" என்ற மிர்ச்சி சிவாவின் வசனம் வைரலாகி வருகிறது.

மிர்ச்சி சிவா பேச்சு

முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு பிரபல கல்லூரி ஒன்றில் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பேசிய மிர்ச்சி சிவா, "எனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது இதுதான் முதல் முறை. மாணவர்களுக்கு கல்வியில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னிடமும் மாகாபா-விடமும் கேட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் எங்கள் இருவருக்குமே அது குறித்து எதுவுமே தெரியாது" என்ற கலகலப்பாக பேசினார். இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஜோடியாக ஹரிஷா நடித்துள்ளார்.

சிறப்பு கேமியோவில் விஜய் சேதுபதி

படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு கேமியோவில் தோன்றுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இதுதொடர்பாக படக்குழு தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவர் படத்தில் சர்ப்ரைசாக தோன்றலாம் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்