பரணி எடுத்த சபதம்.. ரத்னாவை அதிர வைத்த வெங்கடேஷ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பரணி எடுத்த சபதம்.. ரத்னாவை அதிர வைத்த வெங்கடேஷ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

பரணி எடுத்த சபதம்.. ரத்னாவை அதிர வைத்த வெங்கடேஷ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 14, 2024 12:40 PM IST

ரத்னாவை அதிர வைத்த வெங்கடேஷ், சண்முகம், பரணி இடையே ரொமான்ஸ், அதன் பின்னர் பரணி எடுத்த சபதம் என அண்ணா சீரியல் இன்றைய எபிசோடில் பரபரப்பு மிக்க காட்சிகள் இடம்பெறவுள்ளன

பரணி எடுத்த சபதம்.. ரத்னாவை அதிர வைத்த வெங்கடேஷ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
பரணி எடுத்த சபதம்.. ரத்னாவை அதிர வைத்த வெங்கடேஷ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

ரத்னாவை மிரட்டும் வெங்கடேஷ்

இசக்கி பாக்கியத்துடன் இனிமே எங்க வீட்டுல இருக்க வேண்டாம், அண்ணன் கிட்ட சொல்லி வீட்டை விட்டு போயிடலாம் என்று சொல்கிறாள். பாக்கியம் நாம் எதுக்கு வீட்டை விட்டு போகணும் இந்த வீடு என் பொண்ணோட பேர்ல தான் இருக்கு. சாப்பாட்டுல கல் இருந்தால் கல்லை தூக்கி போட்டுட்டு சாப்பிடுவோம். அப்படித்தான் உங்களை எல்லாம் கண்டுக்க கூடாது என சொல்கிறாள்.

அதை தொடர்ந்து வெங்கடேஷ், ரத்னாவிடம் ஸ்கூல் ஹோம் ஒர்க்கை தனது குழந்தைக்கு எழுதி கொடுக்க சொல்ல, ரத்னா முடியாது என மறுக்கிறாள். பின் வெங்கடேஷ் எழுதிக் கொடுக்கலைனா வீட்டை விட்டு துரத்து விடுவேன், உனக்கு போறதுக்கு இடம் இல்லை என மிரட்டுகிறான்.

இன்னொரு பக்கம் சிவபாலன் அக்காவுக்கு விஷயத்தை சொல்லிவிடலாம் என்று சொல்கிறான். பாக்கியம், அவளுக்கு விஷயம் தெரிய கூடாது என தடுத்து விடுகிறாள்.

சண்முகம், பரணி இடையே ரொமான்ஸ்

அதன் பிறகு சண்முகம் கீழே போகும், பரணி பெட்டில் படுத்துக் கொண்டிருந்தவாறே என் அப்பாகிட்ட சபதம் விட்டா மட்டும் போதாது அதுல ஜெயிச்சு காட்டணும் என்கிறாள். போட்டியில ஜெயிக்கணும்னா என் அப்பாவோட வேட்டி உருவுனா மட்டும் போதாது என்று ரொமான்ஸாக பேசியவாறே சண்முகத்தை நெருங்குகிறாள. அப்போது அவன் கந்த சஷ்டி விரதம் என கூறி தள்ளி போகிறான்.

உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரேன்னு பாரு என பரணி சபதம் எடுக்கிறாள். பின்னர் மறுநாள் காலையில் சண்முகத்தை கட்டிபிடித்தபடி கீழே படுத்து இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

இசக்கியை ரொம்ப மோசமாக பேசி சௌந்தரபாண்டி அடித்தார். பின் மண்ணெயை ஊற்றி இசக்கியை கொளுத்த தீ குச்சியை பத்த வைத்தார் சௌந்தரபாண்டி. அப்போது மாஸாக என்ட்ரி வைத்தார் சிவபாலன், தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்தார். இதனால் சௌந்தரபாண்டிக்கும் சிவபாலனுக்கும் இடையே பிரச்சனை வருகிறது. அப்போது வந்த பாக்கியம், இசக்கி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதன் பின்னர், அவர் சிவபாலனிடம் சீம எண்ணெய்யை கொண்டு வர சொல்லி நான் சொல்றதை அப்படியே எழுது என சொல்கிறார். பாக்கியம், என் புருஷனும் அவர் அக்காவும் பாக்கியம், செய்த கொடுமையால் நான் சீம எண்ணெய் ஊற்றி கொழுத்தி கொண்டேன். அதோடு என் புருஷனையும் அவர் அக்காவையும் கொளுத்திட்டேன் என்று சொல்லி அவர்கள் மீது எண்ணெய்யை ஊற்ற, சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த சூழ்நிலையில் இன்று ரத்னாவை மிரட்டும் வெங்கடேஷ், சண்முகம், பரணி இடையே ரொமான்ஸ் போன்ற காட்சிகளுடன் ஒளிபரப்பாக இருக்கிறது.

அண்ணா சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த அண்ணா சீரியல் அதிகப்படியான பார்வையாளர்களை கொண்ட சீரியலாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 400க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்துள்ளது. அண்ணன் - தங்கை பாசத்தை மையப்புள்ளியாக வைத்து இந்த சீரியலின் கதையம்சம் அமைந்துள்ளது. இதில் மிர்ச்சி செந்தில் குமார் அண்ணாவாக தோன்றுகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.