அப்போ வேட்டி.. இப்போ சட்டை.. அண்ணா சீரியலில் இதான் மிர்ச்சி செந்தில் ஸ்பெஷல் அடையாளம்!
அண்ணா சீரியலில் மிர்ச்சி செந்தில் கேட் அப் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.
ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய இவர் இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்தார். இந்த இரண்டு சீரியலை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள அண்ணா என்ற சீரியலில் நடிக்க உள்ளார்.
இந்த சீரியல் குறித்த அடுத்தடுத்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் செந்தில் முருகபக்தராக நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இதனை தொடர்ந்து செந்திலின் சண்முகம் கதாபாத்திரம் பற்றி மேலும் சில ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. அதவாது இதற்கு முன்னதாக நடித்த சீரியலில் செந்தில் கட்டிய மாயன் வேட்டி மிகவும் ட்ரெண்டானது.
அதே போல இந்த சீரியலில் செந்தில் ஷர்ட் புதிய ட்ரெண்டிங்கை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆமாம், இந்த சீரியல் முழுவதும் ஒரே மாதிரியான சட்டையை தான் செந்தில் பயன்படுத்த உள்ளாராம். அந்த சட்டையில் இரண்டு பக்கம் இரண்டு பாக்கெட், இரண்டு தோள்ப்பட்டை அருகே இரண்டு பாக்கட் என மொத்தம் நான்கு பாக்கெட் இருக்குமாம்.
ஒரு பாக்கட்டில் எப்போதும் பேனா இருக்க இன்னொரு பாக்கட்டில் எம்ஜிஆர் போட்டோ இருக்குமாம், காரணம் இந்த சீரியலில் செந்தில் தீவிர எம்ஜிஆர் ரசிகர். மேலும் ஒரு பாக்கெட்டில் ஒரு சிறிய கணக்கு புக்கும் இருக்க நான்காவது பாக்கெட்டில் சில்லறை, ரூபாய் நோட்டுகள் ஆகியவை இருக்குமாம்.
செந்திலுக்காக இந்த சட்டைகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இதனால் இனி ஷண்முகம் சட்டையும் ட்ரெண்டாகும் என எதிர்பார்க்கலாம் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கழுத்தில் முருகன் டாலர் கொண்ட கருப்பு கயிறு, கையில் செம்பு காப்பு, ருத்ராட்ச மணி, இயேசு சிலுவை என அனைத்து கடவுள்களின் கயிறும் கட்டி இருப்பார் என தெரிய வந்துள்ளது. இவை தான் இந்த சீரியலில் சண்முகத்தின் அங்க அடையாளங்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாபிக்ஸ்