Mimicry artist Sethu: ‘ எப்படி பேசுவேன்னு சட்டைய பிடிச்சிட்டார்.. நான் பயந்தே போயிட்டேன்’ - மிமிக்ரி கலைஞர் சேது
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mimicry Artist Sethu: ‘ எப்படி பேசுவேன்னு சட்டைய பிடிச்சிட்டார்.. நான் பயந்தே போயிட்டேன்’ - மிமிக்ரி கலைஞர் சேது

Mimicry artist Sethu: ‘ எப்படி பேசுவேன்னு சட்டைய பிடிச்சிட்டார்.. நான் பயந்தே போயிட்டேன்’ - மிமிக்ரி கலைஞர் சேது

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 15, 2025 06:19 AM IST

Mimicry artist Sethu: மாறாக இந்த பிரச்சினையை நான் கேப்டன் வரை கொண்டு சென்று பெரிய பிரச்சினையாக மாற்றுவேன் என்று சொல்லி கத்தினார். உடனேஎனக்கு பயம் வந்துவிட்டது. நான் ரவி சாரிடம் இது குறித்து பேசினேன். தொடர்ந்து முரளி சாரிடம் படத்தின் டப்பிங் மாதிரியை பேசியதற்கான ஆதாரங்களை காண்பித்தேன்.

Mimicry artist Sethu: ‘ எப்படி பேசுவேன்னு சட்டைய பிடிச்சிட்டார்.. நான் பயந்தே போயிட்டேன்’ - மிமிக்ரி கலைஞர் சேது
Mimicry artist Sethu: ‘ எப்படி பேசுவேன்னு சட்டைய பிடிச்சிட்டார்.. நான் பயந்தே போயிட்டேன்’ - மிமிக்ரி கலைஞர் சேது

அந்த பேட்டியில் அவர் பேசும் பொழுது, ‘ ஒரு குறிப்பிட்ட படத்தில் நான் முரளி சாரின் ட்ராக்கிற்கு (பின்னணி குரலின் மாதிரி) டப்பிங் பேசி இருந்தேன். இந்த நிலையில், ஒரு நாள் திடீரென்று என்னிடம் வந்த முரளி சார், என் சட்டையை பிடித்து, எப்படி நீ என்னுடைய குரலை பேசலாம். தயாரிப்பாளர் தரப்பு எனக்கு எவ்வளவு பணம் தந்திருக்கிறது, இன்னும் எவ்வளவு தர வேண்டியிருக்கிறது உள்ளிட்ட விவரங்களெல்லாம் உனக்குத் தெரியுமா... என்று கேட்டார்.

உடனே நான் அவரை சார் தயவு செய்து அவசரப்படாதீர்கள்.. பொறுமையாக இருங்கள்..நான் சொல்வதை கேளுங்கள் என்று சொல்லி, அவரை சாந்தப்படுத்த முயற்சித்தேன். ஆனால், அவர் எதையும் கேட்பதாக இல்லை. மாறாக இந்த பிரச்சினையை நான் கேப்டன் வரை கொண்டு சென்று பெரிய பிரச்சினையாக மாற்றுவேன் என்று சொல்லி கத்தினார்.

பயம் வந்துவிட்டது.

உடனேஎனக்கு பயம் வந்துவிட்டது. நான் ரவி சாரிடம் இது குறித்து பேசினேன். தொடர்ந்து முரளி சாரிடம் படத்தின் டப்பிங் மாதிரியை பேசியதற்கான ஆதாரங்களை காண்பித்தேன். அத்துடன் இது உங்களது குரலா என்று கேளுங்கள் என்று சொல்லியும் கேட்டேன் குரலை கேட்டு விட்டு முரளி இல்லை என்றார். உடனே நான் பிறகு எப்படி சார் நீங்கள் என் மீது கோபப்படலாம் என்று கேட்டேன். உடனே அவர் தவறாக எடுத்துக் கொள்ளாதே என்று சொல்லி, அங்கிருந்து கிளம்பினார்.

அன்றிலிருந்து யாருடைய குரலை நான் டப்பிங் பேச வேண்டும் என்றாலும், அவர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏதேனும் சம்பள பாக்கி இருக்கிறதா என்பதை கேட்டு விட்டுதான் பேசுவேன்.

இதே போன்று ஒரு பிரச்சினை ஜனகராஜ் சாருடனும் வந்தது. அது ராமநாராயணன் சார் படம்.. அந்தப்படத்தில் எலும்பு கூடுவிற்கு ஜனகராஜ் போல பேச வேண்டும் என்று கேட்டனர். அதற்கு நான் தயவு செய்து வேண்டாம் சார்; பிரச்சினை ஆகிவிடும் என்று கூறினேன். ஆனால், ராமநாராயணன் சார், ஜனகராஜ் நம்ம பையன். நீ பேசு என்று தைரியம் கொடுக்க, நானும் மொத்தமாக பேசிக் கொடுத்து விட்டேன்.

இந்த நிலையில் நானும் ஜனகராஜ் சாரும் ஒரு டிவி நிகழ்ச்சியில் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த தியாகு சார் ஜனகராஜிடம் என்ன ஜனகராஜ் எலும்புகூடிற்கெல்லாம் டப்பிங் பேசுகிறாய் என்று கேட்டார். அதற்கு ஜனகராஜ் சார், நான் அமெரிக்க சென்றிருந்த கேப்பில், எனவோ ஒருவன் என் வாய் மீது வாய் வைத்து விட்டான் என்று பேசினார். ஆனால், நான் எதுவுமே பேசவில்லை. இப்போது வரை அதை நான் தான் பேசியது என்று தெரியாது’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்கும் இவர், 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம், பிசினஸ், விளையாட்டு, அரசியல், தேசம் - உலகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் கட்டுரைகள் எழுதும் திறமை கொண்ட இவர், முன்னதாக புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பொழுது போக்கு செய்திகளை வழங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஆகும். திரைப்படங்கள் பார்ப்பது, நாவல்கள் படிப்பது, சிறுகதைகள் எழுதுவது, சினிமா சார்ந்த உரையாடல்கள் கேட்பது, நீண்ட தூர பைக் பயணங்கள், பழமையான கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வது உள்ளிட்டவை இவரது பொழுது போக்கு ஆகும்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.