Arjun Das: ‘என்ன சார் உங்களுக்கு ரொமன்ஸ் வருமா?’ அர்ஜூன் தாஸூக்கு ஜோடியான ஷங்கர் மகள் - யாரு டைரக்டர் தெரியுமா?
Arjun Das: அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டு இருக்கிறது. படத்தில் கதாநாயகியாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கமிட் ஆகி இருக்கிறார்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’
‘அந்தகாரம்’, ‘கைதி’ , ‘மாஸ்டர்’ ‘ரசவாதி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அர்ஜூன்தாஸ். இவர் தற்போது புதிய படமொன்றில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்திற்கு, ‘புரொடக்ஷன் நம்பர் 4 ’ என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 4' படத்தில், அர்ஜூன் தாஸூக்கு ஜோடியாக, பிரபல இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக கமிட் ஆகி இருக்கிறார்.
குழு விபரங்கள்
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை, நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். முழு நீள பொழுதுபோக்கு படமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில், தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். ஃபின்டேமேக்ஸ் (FYNTEMAX) வி ஆர் வம்சி இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.
முன்னதாக, குட் நைட், லவ்வர் என தொடர்ந்து ஃபீல் குட் திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிப்பதால், இந்தப்படமும் அந்த வரிசையில் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.
மலையாளத்திலும் கால் பதித்த நடிகர் அர்ஜூன் தாஸ்
முன்னதாக, அர்ஜூன் தாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான ரசவாதி கலவையான விமர்சனங்களை பெற்றது. தெலுங்கிலும் படமொன்றில் கமிட் ஆகி நடித்து வரும் இவர், மலையாளத்திலும் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இந்தப்படத்தை இயக்குநர் அகமது கபீர் இயக்க இருக்கிறார். முன்னதாக அகமது கபீரின் 'ஜூன்', 'மதுரம்' மற்றும் ‘கேரளா க்ரைம் ஃபைல்ஸ் வெப் சீரிஸ்’ உள்ளிட்ட படைப்புகள் மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில், இந்தப்படமும் அந்த வரிசையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஹிருதயம்', குஷி, & ஹாய் நானா ஆகிய படங்களில் பணியாற்றிய ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.
விருமன் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷங்கரின் மகள் அதிதிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு மாவீரன் திரைப்படம் . மேடன் அஷ்வின் இயக்கிய இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து இருந்தார். கடந்த ஆண்டு வெளியான விருமன் படம் பாக்ஸ் ஆபிஸிலும் 80 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. அதிதி ஷங்கர் நடித்த இரண்டு படங்களும் ஹிட் ஆனதால் கோலிவுட்டின் லக்கி ஹீரோயினாக மாறினார் அதிதி ஷங்கர் . தற்போது அதிதிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
கோலிவுட்டில் லக்கி ஹீரோயினாக வலம் வரும் அதிதி ஷங்கரின் நிகர மதிப்பு மற்றும் சம்பள விவரங்களைப் பார்ப்போம் . அதன்படி தற்போது ஒரு படத்துக்கு ரூ.35 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார். அடுத்தடுத்த படங்களின் ரிசல்ட்டைப் பொறுத்து சம்பளத்தை லட்சத்தில் இருந்து கோடியாக மாற்றும் முடிவில் இருக்கிறாராம் அதிதி. தற்போதைய நிலவரப்படி இவரது சொத்து மதிப்பு ரூ.80 லட்சம் என கூறப்படுகிறது. அதிதியின் தந்தை சங்கருக்கு ரூ.250 கோடிக்கு மேல் சொத்து உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்