தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Case Against Dhanush: வாடகைக்கு இருந்தவரை மிரட்டியதாக புகார்! தனுஷுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

Case Against Dhanush: வாடகைக்கு இருந்தவரை மிரட்டியதாக புகார்! தனுஷுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 15, 2024 03:15 PM IST

புதிதாக வாங்கிய வீட்டில் வாடகைக்கு இருந்தவரை மிரட்டியதாக புகார் எழுந்து தனுஷுக்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.

வாடகைக்கு இருந்தவரை மிரட்டியதாக புகார், தனுஷுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு
வாடகைக்கு இருந்தவரை மிரட்டியதாக புகார், தனுஷுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வரும் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் மிக பெரிய பங்களா ஒன்றை கட்டியுள்ளார். தனது பங்களா அருகே மற்றொரு வீடு ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார்.

தனுஷுக்கு எதிராக மனு

இதையடுத்து, தனுஷ் வாங்கிய வீட்டில் வாடகைக்கு குடியிருந்த அஜய்குமார் லூனாவத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை போயஸ் கார்டனில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எனது வீட்டுக்கு வந்த சிலர், இந்த வீட்டை நடிகர் தனுஷ் விலைக்கு வாங்கி விட்டார். எனவே உடனடியாக வீட்டை காலி செய்து தர வேண்டும் என்று மிரட்டினர்.

சட்டவிரோத செயல்

ஆனால், வீட்டுக்கான வாடகை ஒப்பந்தம் அமலில் இருந்ததால், உடனடியாக வீட்டை காலி செய்ய மறுத்தேன். அதனால், வீட்டின் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். நான் முறையாக வாடகை செலுத்தி வருகிறேன்.

ட்ரெண்டிங் செய்திகள்

எந்தவொரு முன்னறிவிப்புமின்றி திடீரென ஏராளமான நபர்கள் வந்து, வீட்டைக் காலி செய்து கொடுக்கும்படி வற்புறுத்தியது சட்டவிரோதமானது. இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு நடிகர் தனுஷ் உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

காணொலி காட்சி மூலம் தனுஷ் ஆஜர்

இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் தனுஷ் ஆஜராகினார். இதையடுத்து தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன், இந்த வீ்டு காலி செய்யும் விவகாரத்தில் இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டது. கடந்த மே 31ஆம் தேதி அந்த வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று கூறினார்.

இதை நீதிபதி பதிவு செய்து, தனுஷுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

தனுஷ் புதிய படம்

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக கேப்டன் மில்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து இசைஞானி இளையராஜா பயோபிக்கில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தை தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். 

இதற்கிடையே தனது 50வது படமாக ராயன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், ஜெயராம், சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்னா பாலமுரளி, அனிகா சுரேந்திரன், வரலட்சுமி சரத்குமார், சரவணன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். 

இது தவிர தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் குபேரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்து வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.