56 Years of Thaikku Thalaimagan: தொண்டையில் சுடப்பட்ட மறுநாளில் வெளியான படம்! பீனிக்ஸ் பறவை போல் மீண்ட எம்ஜிஆர்
எம்ஜிஆர் திரையுலக வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸ்கான அஸ்திவாரமாக தாய்க்கு தலைமகன் படம் அமைந்திருந்தது. எம்ஜிஆர் - சாண்டோ சின்னப்ப தேவர் கூட்டணியில் வெளிவந்த தாய் செண்டிமெண்ட் படங்களில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.
எம்ஜிஆர் நடித்து தாய் செண்டிமெண்டை மையப்படுத்தி வெற்றி பெற்ற மற்றொரு படம் தாயக்கு தலைமகன். வழக்கமான எம்ஜிஆர் படங்களில் இடம்பெறும் அனைத்து ஜனரஞ்சக விஷயங்கள் இந்த படத்திலும் இடம்பிடித்திருந்தன.
அத்துடன் படத்தில் இடம்பிடித்த நடிகர்களும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். எஸ்.வி. ரங்கா ராவ், எஸ்.ஏ. அசோகன், ஆர்.எஸ். மனோகர், காமெடிக்கு நாகேஷ், மனோரமா, செளகார் ஜானகி, எஸ்.என். லட்சுமி என பலரும் நடித்திருப்பார்கள். எம்ஜிஆர் ஜோடியாக ஜெயலலிதா நடித்திருப்பார்.
தேவர் பிலிம்ஸ் சார்பில் சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்திருந்த இந்த படத்தை அவரது சகோதரர் எம்.ஏ. திருமுருகன் இயக்கியிருப்பார்.
வில்லன், குணச்சித்திர நடிகர் எம்.ஆர். ராதா, எம்ஜிஆரை சுடப்பட்டதற்கு மாறு நாளில் இந்த படம் வெளியானது. பெங்கல் வெளியீடாக ஜனவரி 13ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனவரி 12ஆம் தேதி, 1967இல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே உலுக்கிய எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவம் அரங்கேறியது.
எம்ஜிஆர் - சாண்டோ சின்னப்ப தேவர் கூட்டணியில் ஏற்கனவே வெளியான தாய்க்குப் பின்தாரம், தாய் சொல்லை தட்டாதே ஆகிய படங்களை தொடர்ந்த தாயின் மகத்துவத்தை பேசும் விதமாக தாயக்கு தலைமகன் படம் உருவாகியிருந்தது. முந்தைய இரு படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைய, இந்த படத்தை காண்பதற்கு ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியாக அமைந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எம்ஜிஆரின் ரசிகர்கள் ஏராளமானோர் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை நோக்கிய படையெடுத்தனர். அதேபோல் அவர் அப்போது அரசியலில் இருந்து திமுக தொண்டர்களும் மருத்துவமனை குவிந்தனர். இந்த சூழ்நிலையில் திட்டமிட்டபடி படம் வெளியானது.
படத்தை பார்த்தவர்கள் எம்ஜிஆருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற கண்களில் நீர் வழிந்தபடியே இந்த படத்தையும் பார்த்துள்ளனர். தாய்க்கு தலைமகன் படத்தின் கதையிலும் செண்டிமெண்ட் காட்சிகளிலும் எம்ஜிஆர் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.
எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதில் குண்டு எம்ஜிஆர் தொண்டையில் பாய்ந்தபோதிலும், ரசிகர்களின் பிரார்தனையால் அவர் உயிர் பிழைத்தார். ஆனாலும் அவரது குரல்வளம் மாறிப்போனது. இதனால் எம்ஜிஆர் மறுபடியும் நடிப்பு பக்கம் வரமாட்டார் என பத்திரைகளில் அப்போது தொடர்ந்து செய்திகள் வெளியானதுடன், அவரது ஸ்டார் அந்தஸ்தையும் குறைக்கும் விதமாக செய்திகள் வெளியாகின.
ஆனால் யாரும் எதிர்பார்த்திராத விதமாக முன்பை போல் குரல் வளம் இல்லாவிட்டாலும், மீண்டு வந்த எம்ஜிஆர் டப்பிங் முடிக்க வேண்டி இருந்த படங்களையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாரே முடித்து கொடுத்து ஆச்சர்யமூட்டினார்.
இதற்கிடையே தாயை மையமாக வைத்து பொங்கல் வெளியீடாக வந்த தாய்க்கு தலைமகன் படம் ரசிகர்களை கவர்ந்து 100 நாள்களுக்கு மேல் ஓடி ஹிட்டானது. தாயை மையமாக வைத்து எம்ஜிஆர் - சாண்டோ சின்னப்பா தேவரின் ஹாட்ரிக் வெற்றியாக இந்த படம் அமைந்தது.
படத்துக்கு கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத கே.வி. மகாதேவன் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. எம்ஜிஆர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டபோது வெளியாகி ஹிட்டடித்து, சினிமாவில் அவரது அடுத்த இன்னிங்ஸ்கான விதையாக இருந்த தாய்க்கு தலைமகன் வெளியாகி இன்றுடன் 57 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்