67 Years of Chakravarthi Thirumagal: இளவரசர் உதயசூரியனாக தோன்றிய எம்ஜிஆரின் ஹீரோ அந்தஸ்தை உயர்த்திய மன்னர் காலத்து படம்-mgr starrer chakravarthi thirumagal completed 67 years of its release - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  67 Years Of Chakravarthi Thirumagal: இளவரசர் உதயசூரியனாக தோன்றிய எம்ஜிஆரின் ஹீரோ அந்தஸ்தை உயர்த்திய மன்னர் காலத்து படம்

67 Years of Chakravarthi Thirumagal: இளவரசர் உதயசூரியனாக தோன்றிய எம்ஜிஆரின் ஹீரோ அந்தஸ்தை உயர்த்திய மன்னர் காலத்து படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 18, 2024 04:45 AM IST

எம்ஜிஆர் நடித்த மன்னர் காலத்து படங்களில் சூப்பர் ஹிட்டாக அமைந்ததுடன், அவரது ஹீரோ அந்தஸ்தை உயர்த்திய படமாக இருந்தது சக்கரவர்த்தி திருமகள்.

சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எம்ஜிஆர்
சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எம்ஜிஆர்

அந்த வகையில் எம்ஜிஆர் சினிமா கேரியரில் அவருக்கு சூப்பர் ஹிட் கொடுத்த மன்னர் கால திரைப்படமாக சக்கரவர்த்தி திருமகள் படம் உள்ளது. எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குநர் ப. நீலகண்டன் படத்தை இயக்கியிருப்பார். பி.ஏ. குமார் கதைக்கு இளங்கோவன் வசனம் எழுதியிருப்பார்.

படத்தில் அஞ்சலி தேவி, வரலட்சுமி, பிஎஸ் வீரப்பா, தங்கவேலு, என்எஸ் கிருஷ்ணந் பிரதான காதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இளவரிசியாக வரும் அஞ்சலி தேவியை மணமுடிக்க சில கடிமான போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார் இளவரசனாக வரும் எம்ஜிஆர். அப்போது அஞ்சலி தேவியை மணமுடிக்க முடியாமல் வரலட்சுமி செய்யும் சூழ்ச்சிகளை உடைத்து, வில்லனாக வரும் பிஎஸ் வீராப்பாவிடமிருந்து இளவரசியை கரம் பிடித்து இறுதியில் திருமணம் செய்து கொள்வதே படத்தின் கதை.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தீவிர ஆதராவாளராக அப்போது இருந்து வந்த எம்ஜிஆர், இந்த படத்தில் இளவரசர் உதயசூரியன் என பெயரில் தோன்றியிருப்பார். மன்னர் காலத்து கதை என்பதால் பிரமாண்டத்துக்கு சற்றும் குறைவில்லாமல் படம் உருவாக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரின் ஹீரோயிசம், பிஎஸ் வீரப்பாவுடனான சண்டை காட்சிகள் படம் வெளியான காலகட்டத்தில் வெகுவாக பேசப்பட்டது.

படத்துக்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருப்பார். படத்தில் மொத்தம் 13 பாடல்கள் இடம்பிடித்திருக்கும். இதில் காதல் என்னும் சோலையிலே பாடல் காலத்தால் அழியாத கிளாசிக் பாடலாக இருந்து வருகிறது. இது தவிர ஆட வாங்க அண்ணாத்தே, எல்லை இல்லாத இன்பத்திலே, பொறக்கும் போது, கண்ணாளனே, சொல்லாலே விளக்க முடியல போன்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதில் ஆட வாங்க அண்ணாத்தே பாடல் அந்த காலத்தில் படமாக்க பட்ட குத்து பாடல் போல் காட்சிகள் அமைந்திருக்கும். இந்த பாடலுக்கு ஈ.வி. சரோஜா தனது நடனத்தால் ஜாலம் செய்திருப்பார்.

பொங்கல் வெளியீடாக இல்லாமல், பொங்கல் திருவிழா முடிந்த பின்னர் ஜனவரி 18, 1957இல் இந்த படம் வெளியானது. ஆனாலும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மற்றொரு திருவிழாவாகவே இந்த படம் விருந்து படைத்தது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது.

எம்ஜிஆர் திரை வாழ்க்கையில் சூப்பர் ஹிட்டாக அமைந்து, அவரது மார்க்கெட்டை வெகுவாக உயர்த்திய படமாக திகழந்த சக்கரவத்தி திருமகள் வெளியாகி இன்றுடன் 67 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.