தமிழ் சினிமா ரீவைண்ட்: எம்ஜிஆர், சிவாஜி கணேசன் கிளாசிக் ஹிட் படங்கள்.. ஏப்ரல் 26 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
ஏப்ரல் 25ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோரின் கிளாசிக் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நாளில் வெளியாகி கவனம் ஈரத்த சில படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

ஏப்ரல் 26, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர் நடித்த ராஜ ராஜன், கண்ணன் என் காதலன் சிவாஜி கணேசன் நடித்த தர்மராஜா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் சந்தீப் கிஷன் நடித்த அடல்ட் ரெமாண்டிக் காமெடி படமான யாருடா மகேஷ் படமும் இந்த தேதியில் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
ராஜா ராஜன்
டி.வி. சுந்தரம் இயக்கத்தில் எம்ஜிஆர், பத்மினி, லலிதா, பிஎஸ் வீரப்பா, எம்என் நம்பியார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து 1957இல் வெளியான படம் ராஜா ராஜன். ராஜா ராஜ சோழன் கதாபாத்திரத்தில் அதே பெயரில் சிவாஜி நடித்திருப்பது பலரும் அறிந்த விஷயம். ஆனால் அதற்கெல்லாம் முன்னரே எம்ஜிஆர் ராஜ ராஜ சோழனாக இந்த படத்தில் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மன்னர் கதாபாத்திரம் என்பதால் வாள் சண்டை, ஆக்சன் காட்சிகளில் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இருப்பினும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் சராசரியாக திரையரங்குகளில் ஓடியது.
மேலும் படிக்க: எம்ஜிஆர் நடித்த ராஜராஜன் படத்தின் கதை தெரியுமா?
கண்ணன் என் காதலன்
பி. நீலகண்டன் இயக்கத்தில் ஆர்.எஸ். வீரப்பன் கதை, திரைக்கதை எழுத எம்ஜிஆர், ஜெயலலிதா, வாணிஸ்ரீ பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க 1968இல் வெளியான படம் கண்ணன் என் காதலன். விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்துடன் வெளியான படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்த ஆண்டில் மட்டும் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகியோர் இணைந்து 8 படங்களில் நடித்தனர். அனைத்து படங்களும் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றன.
எம்ஜிஆர், ஜெயலலிதாவை காதலிக்கா, அத்தை மகளான வாணிஸ்ரீ, எம்ஜிஆரை காதலிக்கு இறுதியில் என்ன நடந்தது என்பதை முக்கோணா காதல் கதையாக கண்ணன் என் காதலன் படம் அமைந்திருந்தது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடுவோர் பாடலாம் என்ற பாடல் பல்வேறு வெஸ்டர்ன் இசை வாத்தியங்கள் பயன்படுத்திய பாடலாகவும், சிறந்த கிளாசிக் பாடலாகவும் இன்று வரையிலும் உள்ளது
தர்மராஜா
எம்.ஏ. திருமருகன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா, கே. பாலாஜி, மேஜர் சுந்தரராஜன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து 1980இல் வெளியான மாஸ் படம் தர்மராஜா. சிவாஜி கணசன் நடிப்பில் ஜனரஞ்சக படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான இந்த படத்தில் குதிரை பைட், கார் பைட், பைக் பைட், கிளைமாக்ஸில் பாராசூட்டில் கூட பைட் செய்து சிவாஜி கணேசன் பின்னி பெடலெடுத்திருப்பார்.
கடவுள் பக்தி, தங்கை செண்டிமெண்ட், ஹீரோயினுடன் காதல், வில்லனை பழிவாங்குதல் என பக்கா கமிர்ஷியல் படமாக தர்மராஜா அமைந்திருக்கும். படத்தின் கதை கிராமத்தில் தொடங்கி, நகரம் சென்று, ஜப்பானில் உள்ள டோக்கியாவில் வில்லனை வேட்டையாடும் விதமாக முடிந்திருக்கும். ஜப்பானின் அழகை, வாழ்வியல் முறையை கேமராக்களில் பதிவு செய்திருப்பார்கள்.
கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் ரசிக்கும் விதமாக அமைந்திருந்தன. ஒரேயொரு பாடலை ஜப்பான் மொழியில் ராக் மியூசிக்கில் அந்த காலகட்டதிலேயே இசையமைத்திருப்பார் எம்.எஸ்.விஸ்வநாதன். 100 நாள்களுக்கு மேல் ஓடிய சிவாஜி கணேசனின் ஹிட் படமாக தர்மராஜா அமைந்துள்ளது
யாருடா மகேஷ்
ஆர். மதன் குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷன், டிம்பிள் சோப்டே, ஜெகன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க அடல்ட் ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகியிருந்த யாருடா மகேஷ் திரைப்படம் 2013இல் வெளியானது.
மேலும் படிக்க: நடிகை ரெஜினாவுடனான 12 வருட உறவு.. சந்தீப் கிஷன்
வழக்கமான காதல் கதையில் காமெடியுடன், சில சைக்கலாஜிக்கல் விஷயங்களையும் வைத்து படத்தை உருவாக்கியிருப்பார்கள். ஏ சர்ட்பிக்கேட் பெற்றிருந்த இந்த படம் குறைவான ஸ்கிரீன்களில் வெளியானாலும் சராசரி வசூலை பெற்று தந்த படமாக உள்ளது.
