Thirudathe: மாடர்ன் கிராஃப் MGR.. ஜோடியான சரோஜா; மறக்க முடியா திருடாதே படம்!
1961 ஆம் ஆண்டு எம் ஜி ஆரின் நடிப்பில் வெளியான திருடாதே திரைப்படம் வெளியாகி 62 ஆண்டுகள் கழிந்திருக்கின்றன
‘திருடாதே’ திரைப்படத்தில் ‘புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் எம்.ஜி.ஆர் பெயர் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த டைட்டிலை படத்தில் ஒளிரச் செய்தவர் ஏ.எல்.சீனிவாசன். அந்த டைட்டிலை எம்.ஜி. ஆருக்கு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
விடுதலை போராட்ட வீரர், கதாசிரியர், படத் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்கிய சின்ன அண்ணாமலைக்கு எம்.ஜி.ஆரை வைத்து சமூகம் சார்ந்த படம் ஒன்றை எடுக்க வேண்டுமென்று ஆசை.
அந்த ஆசையை நுண்ணிய காற்றுப்போல எம்.ஜி.ஆர் காதில் போட, எம்.ஜி. ஆரோ வாள் சண்டை கதாபாத்திரங்களை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். உடனே அண்ணாமலை மாடர்ன் கிராஃப் வெட்டிய எம்.ஜி.ஆரின் ஓவியத்தை காண்பிக்க அந்த லுக் அவருக்கு பிடித்து போனது.
‘பாக்கெட் மார்’ என்ற இந்தி படமானது தமிழில் ‘திருடாதே’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. அதன் உரிமையை பெற்றிருந்தவர் சின்ன அண்ணமலை. அதில் மாடர்ன் கிராஃப் வெட்டி புதிய லுக்கில் நடித்தார் எம்.ஜி.ஆர்
கால்ஷீட் பிரச்சினை காரணமாக எல்லாவித நேரத்திற்கு ஒத்துழைக்கும் கதாநாயகி வேண்டும் என்பதால் கன்னடத்தில் இருந்து சரோஜா தேவி இறக்கப்பட்டார். இந்த படத்தின் போது சின்ன அண்ணாமலையிடம் இருந்த சரோஜா தேவியின் மூன்று படங்களில் கால்சீட்டுகளில் இருந்து ஒரு படத்தின் கால்ஷீட்களை எம்.ஜி. ஆர் வாங்கி கொண்டார். அந்த திரைப்படம்தான் ‘நாடோடி மன்னன்’
படங்களில் மட்டுமல்லாமல் நாடகங்களிலும் நடித்து வந்தார் எம்.ஜி.ஆர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது கால்முறிவு ஏற்பட்டு எம்.ஜி. ஆருக்கு விபத்து ஏற்பட்டது. அதனால் வட்டி சிரமத்தை சமாளிக்க ஏ.எல்.சீனிவாசனின் உதவியை நாடினார் அண்ணாமலை.
கால் குணமாகி எம்.ஜி. ஆர் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
‘திருடாதே’ டைட்டிலை சொன்னதற்காக இந்த திரைப்படத்தில் வசனம் எழுதிய மா.லட்சுமணனுக்கு 500 ரூபாய் பரிசளித்தார் எம்.ஜி.ஆர்.
திருடன் வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த இந்த திரைப்படம் இப்போதும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
தகவல் உதவி தி இந்து தமிழ்!
டாபிக்ஸ்