MGR : இடிச்ச புளி செல்வராஜை கதறி அழுக விட்ட எம்.ஜி.ஆர்.. தாலி எடுத்து தர மறுத்த காரணம் இதுதான்!
MGR : நீங்க தாலி எடுத்து கொடுப்பீங்கன்னு நினைச்சேன் என்றார் இடிச்ச புளி செல்வராஜ். அதற்கு எம்ஜிஆர், செல்வம் எனக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. அண்ணணுக்கு குழந்தைகள் இருக்காங்க, தம்பதி சமயதமாக மகிழ்ச்சியாக உள்ளனர். அவங்க தாலி எடுத்து கொடுத்தாதான் உன் குடும்பமும் உன் வம்சமும் விருத்தி அடையும் என்றார்
MGR : தமிழ்நாட்டிற்கும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்திற்கும் பிரிக்க முடியாத பந்தம் இன்றும் தொடர்ந்து இருந்து வருகிறது.
தமிழ்நாடு அரசியலிலிருந்தும், தமிழ் சினிமாவில் இருந்தும் எம்ஜிஆரை பிரித்து இன்று வரை பார்க்க முடியாது என்பதே நிதர்சனம்.
தனது நடிப்பின் மூலம் செல்வத்தைக் குவித்த எம்ஜிஆர் அனைவருக்கும் அதை தன்னை நாடி வருபவர்களுக்கு அள்ளிக் கொடுத்தார் எனப் பலரும் தற்போது வரை அவரது பெருமையைக் கூறுவது உண்டு. அவரால் உதவி பெற்றவர்கள் ஏராளம், ஒருவர் செய்த உதவி அவர் இறந்த பிறகும் வாழும் என்பதற்கு எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய உதாரணமாகும். அதனால் தான் இன்று வரை அவர் மக்கள் திலகம் என அழைக்கப்பட்டு வருகிறார்.
இப்படிப் பட்ட எம்ஜிஆர் தன் வாழ்நாளில் தன் உடன் சுமார் 40 ஆண்டுகள் பயணித்த இடிச்சபுளி செல்வராஜை கதறி அழுக வைத்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இதுகுறித்து சினிமா பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தனது VK Sundar Updates என்ற யூடியூப் சேனலில் பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது,
"புரட்சி தலைவர் எம்ஜிஆரிடம் குறிப்பிடும் படியான ஒரு பழக்கம் இருந்தது. அது என்ன வென்றால் யாராவது ஒரு திருமண அழைப்பிதழை கொண்டு வந்து தந்தால் உடனே டேட் கொடுக்க மாட்டார். அதை வாங்கி வைத்து கொண்டு ஏதோ ஒரு காரணம் சொல்லி அவர்களை அனுப்பி விடுவார். பின்னர் தனது அண்ணன் எம்ஜி சக்கரபாணியிடம் சென்று அந்த தேதியில் நீங்க ஃபிரியா இருக்கீங்களா என்று கேட்பார். சக்கர பாணி அந்த தேதியில் பிசியாக இருந்தால் அந்த திருமணத்திற்கு தேதி தருவதை மறுத்துவிடுவார்.
அந்த வகையில் உதவி இயக்குநரும், நடிகருமான இடிச்ச புளி செல்வராஜ் எம்ஜிஆருடன் நீண்ட காலம் இருந்தார். அவர் தனது திருமணத்திற்கு பத்திரிக்கை தருகிறார். அப்போது வழக்கம் போல் எம்ஜிஆர், இல்ல.. செல்லவராஜ் எனக்கு வேலை இருக்கிறது.. நான் சொல்கிறோன் என்கிறார். இது இடிச்ச புளி செல்வராஜிற்கு பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன தலைவர் இப்படி சொல்லிட்டாரே என வருத்தப்படுகிறார்.
எம்ஜிஆர் தாலி எடுத்து தர மறுத்த காரணம்
எம்ஜிஆர்க்கு குழந்தைகள் இல்லை.. அது அவருக்கு ஒரு குறையாகவே இருககும். அதனால் திருமணத்திற்கு சென்றால் தன் கையால் தாலி எடுத்து கொடுப்பது சரியாக இருக்காது என்று எண்ணுவார். அதனால் எப்போதும் அவர் தனது அண்ணனையும் அண்ணியையும் திருமணத்திற்கு அழைத்து செல்வார். அதனால் அண்ணன் அந்த தேதியில் ஃபிரியாக இருந்தால் மட்டும் தான் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல ஒத்துக்கொள்வார்.
அப்படி அண்ணையும் அண்ணியையும் அழைத்துகொண்டு இடிச்ச புளி செல்வராஜ் கல்யாணத்திற்கு செல்கிறார். எம்ஜிஆரை பார்த்ததும் மண்டபத்தில் எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி.
அப்போது எம்ஜிஆரிடம் தாலி எடுத்துக்கொடுக்க அவரோ தன் அண்ணன் அண்ணியிடம் தாலியை கொடுக்கிறார். இது திருமண கோலத்தில் இருந்த இடிச்ச புளி செல்வராஜ்க்கு பெருத்த ஏமாற்றம் தருகிறது.
விருந்துக்கு அழைத்த எம்ஜிஆர்
திருமணம் முடிந்த பின் ஒரு நாள் எம்ஜிஆர் இடிச்ச புளி செல்வராஜையும் அவரது மனைவியும் விருந்துக்கு அழைக்கிறார். விருந்துக்கு வந்த செல்வராஜ் வீடு திரும்பும் போது தனது ஆற்றாமையை எம்ஜி ஆரிடமே கேட்கிறார். தலைவரே நீங்க தாலி எடுத்து கொடுப்பீங்கன்னு நினைச்சேன்.. நீங்க இப்படி பண்ணிட்டீங்களே எனக்கு ரெம்ப வருத்தம் என்கிறார். அதற்கு எம்ஜிஆர், செல்வம் எனக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. அண்ணணுக்கு குழந்தைகள் இருக்காங்க, தம்பதி சமயதமாக நீண்ட நாட்களாக மகிழ்ச்சியாக உள்ளனர். அவங்க தாலி எடுத்து கொடுத்தாதான் உன் குடும்பமும் உன் வம்சமும் விருத்தி அடையும் என்கிறார்.
கதறி அழுத இடிச்ச புளி செல்வராஜ்
எம்ஜிஆர் சொன்ன காரணத்தை கேட்ட இடிச்ச புளி செல்வராஜ் ஓ.. என்று கதறி அழுதுள்ளார். தலைவரே நான் போய் உங்கள தப்பா நினைச்சுட்டனே என்று அழுதார்" என வி.கே. சுந்தர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9