Tamil Movies Rewind: எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த முதல் படம்.. ஏப்ரல் 11 ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட் ரீவைண்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies Rewind: எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த முதல் படம்.. ஏப்ரல் 11 ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட் ரீவைண்ட்

Tamil Movies Rewind: எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த முதல் படம்.. ஏப்ரல் 11 ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட் ரீவைண்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 11, 2025 12:00 PM IST

2025ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் ஏப்ரல் 11ஆம் தேதி எம்ஜிஆர் ஹீரோவாக அறிமுகமான படம் உள்பட நினைவில் நீங்காத சில கிளாசிக்கல் படங்கள் வெளியாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளில் ஏப்ரல் 11இல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூப்பர் ஹிட் படங்களை பற்றிய பிளாஷ்பேக்கை பார்க்கலாம்

எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த முதல் படம்.. ஏப்ரல் 11 ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட் ரீவைண்ட்
எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த முதல் படம்.. ஏப்ரல் 11 ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட் ரீவைண்ட்

ராஜகுமாரி

ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கத்தில் எம்ஜிஆர் கே. மாலதி, டி.எஸ். பாலையா, எம். என். நம்பியார் உள்பட பலர் நடித்து வரலாற்று படமாக 1947இல் வந்த படம் ராஜகுமாரி. 1930களில் இருந்தே சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்ஜிஆர், முதல் முறையாக ஹீரோவாக இந்த படத்தில் நடித்தார். எதிரி நாடுகளில் இருந்து ராஜகுமாரியை மீட்பது தான் படத்தின் ஒன் லைன். முதலில் இந்த படத்தில் ஹீரோவாக பி.யு. சின்னப்பா, டி.ஆர். ராஜகுமாரியை நடிக்க வைக்க முடிவு செய்தனராம். ஆனால் படத்தின் இயக்குநர் எம்ஜிஆரை மனதில் வைத்து இந்த கதையை எழுதிய நிலையில், அவரையே ஹீரோ ஆக்கினர். படத்தின் எம்ஜிஆரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் அவருக்கென தனியாக ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கியது.

அந்த காலகட்டத்திலேய லட்சம் ரூபாய் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை பெற்ற படமாக ராஜகுமார் இருந்தது. இந்த படத்துக்கு பின்னர் தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஹீரோவானார் எம்ஜிஆர்

ஹரிச்சந்திரா

கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் சிவாஜி கணேசன், வரலட்சுமி, டி.எஸ். பாலையா, கே.ஏ. தங்கவேலு, எம்.என். நம்பியார், ஓ.ஏ.கே. தேவர், வி.கே. ராமசாமி உள்பட பலர் நடித்த ஹரிச்சந்திரா என்கிற புராண படம் 1968இல் வெளியானது. புராண கதையான ஹரிச்சந்திரா மகராஜா கதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கட்டபொம்மனாக வாழ்ந்தது போல், அந்த படத்துக்கு முன்னரே வெளியாகிய இந்த ஹரிச்சந்திரா படத்தில் ஹரிச்சந்திர மகராஜாவை கண்முன்னே கொண்டுவந்திருப்பார் சிவாஜி கணேசன். 

வாழ்க்கையில் ஒரு முறை கூட பொய் பேசாத ஹரிச்சந்திரா மகாராஜா பொய் பேச வைக்க நடக்கும் சூழ்ச்சிகளும், உண்மை மட்டுமே பேசியதால் அவர் வாழ்க்கையில் சந்தித்த துயரங்களுமாக படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். சிவாஜி கணேசன் நடிப்பில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்றாக இந்த ஹரிச்சந்திரா படமும் உள்ளது.

வியட்நாம் வீடு

பி. மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, நாகேஷ், கே.ஏ. தங்கவேலு, ஸ்ரீகாந்த், வி.எஸ். ராகவன் உள்பட பலர் நடித்து பேமிலி ட்ராமா பாணியில் உருவாகி 1970இல் வெளியான படம் வியட்நாம் வீடு. படத்தில் பிரஷ்டீஜ் பத்மநாபன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் சிவாஜி கணேசன், கேரக்டராகவே வாழ்ந்திருப்பார். வியட்நாம் வீடு என்ற மேடை நாடகத்தை அடிப்படையாக வைத்து சுந்தரம் திரைக்கதை எழுதிய இந்த படம் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்து வரும் சிவாஜி கணேசனின் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது. 

அன்பு, மகழ்ச்சி, பிரிவு, சோகம் என பல்வேறு விதமான உணர்வுகளின் வெளிபாடாக செல்லும் படத்தின் கதை ரசிகர்களை ரசிக்கவும், கண்ணீர் சிந்தவும் வைத்தது. படம் ஹிட்டாகி நல்ல வசூலை குவித்ததோடு தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் விருது சிறந்த நடிகருக்காக சிவாஜி கணேசனுக்கு கிடைத்தது

விடுதலை

கே. விஜயன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கன்னட ஹீரோ விஷ்ணுவர்தன், மாதவி, ஒய்.ஜி. மகேந்திரன், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்த ஆக்சன் ஹெஸ்ட் பாணியில் உருவாகி 1986இல் வெளியான படம் விடுதலை. தி மாஸ்டர் டச் என்ற இத்தாலிய படத்தை தழுவி உருவான குர்பானி என்ற இந்தி படத்தின் ரீமேக்காக விடுதலை உருவாகியிருந்தது.

பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய இந்த படம், அந்த காலகட்டத்தில் மூன்று பெரிய நடிகர்கள் நடித்த படமாக மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. படத்தில் அனைவரது நடிப்பும் சிறப்பாக இருந்தபோதிலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவிக்க தவறியது. இருப்பினும் சிவாஜி - ரஜினி இணைந்து நடித்த இந்த படம் ரசிகர்கள் மனதை வீட்டு நீங்காத படமாக உள்ளது

சந்தோஷ் சுப்பிரமணியம்

மோகன் ராஜா இயக்கத்தில் ரவிமோகன் (ஜெயம் ரவி), ஜெனிலியா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்து ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி 2008இல் வெளியான படம் சந்தோஷ் சுப்பிரமணியம். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பொம்மரிலு படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் தமிழிலும் ஹிட்டானது. படத்தில் ஜெனிலியாவின் க்யூட்டான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

தமிழ் சினிமாவில் நினைவில் நின்ற பெண் கதாபாத்திரங்களில் ஜெனிலியா நடித்த ஹாசினி என்ற கேரக்டரும் அனைவரின் மனதிலும் உள்ளது. இந்த படம் வெளியான சமயத்தில் தான் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் தொடங்கியிருந்தது.

ஐபிஎல் முதல் சீசன் என்பதால் கிரிக்கெட் மீதான ஆர்வம் உச்சத்தில் இருந்த நிலையிலும், சந்தோஷ் சுப்பிரமணியம் படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.