தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Metti Oli Shanthi: ‘காதலிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்காத’ - படப்பிடிப்பில் வாய் விட்ட ரஜினி; வாயடைத்து போன சாந்தி!

Metti Oli Shanthi: ‘காதலிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்காத’ - படப்பிடிப்பில் வாய் விட்ட ரஜினி; வாயடைத்து போன சாந்தி!

Kalyani Pandiyan S HT Tamil
May 02, 2024 07:14 AM IST

“அப்போது, அந்த காதல் வாழுகிறது அல்லவா? சாகவில்லை இல்லையா..? அதற்காகத்தான் அப்படி சொல்கிறேன். நிச்சயமாக நாம் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது. உடனே நான், அப்படியானால் உங்களுக்கு அந்த மாதிரியான அனுபவம் இருக்கிறதா சார் என்று கேட்டேன்.” - சாந்தி!

 மெட்டி ஒலி சாந்தி!
மெட்டி ஒலி சாந்தி!

ட்ரெண்டிங் செய்திகள்

ரஜினி சார் பாடலுக்கான ஒத்திகைக்கு வரும் முன்னரே, யாரோ அவரிடம் சொல்லிவிட்டார்கள்.

இது குறித்து அவர் பேசும் போது, “ நான் ரஜினி சாருடன் நிறைய பாடல்களில் இணைந்து நடனமாடி இருக்கிறேன். பாட்ஷா திரைப்படத்தில் தான் முதன்முறையாக நான் அவருடன் இணைந்து ஆடினேன். அப்போது நான் அவரின் வெறித்தனமான ரசிகை என்பதை, ரஜினி சார் பாடலுக்கான ஒத்திகைக்கு வரும் முன்னரே, யாரோ அவரிடம் சொல்லிவிட்டார்கள். 

ஆகையால் நான் அவர் வந்தவுடன், அவரைக் கட்டிப்பிடித்து, அவரிடம் நான், அவரின் எப்பேர்பட்ட ரசிகை என்பதைச் சொன்னேன். அதைக்கேட்ட அவர், அப்படியா…அப்படியா… என்று சொல்லி, அவரும் என்னை கட்டி அணைத்துக் கொண்டார். 

சாந்தி நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா என்று கேட்டார்.

நாங்கள் மிக மிக ஜாலியாக வேலை செய்த பாடல் என்றால், படையப்பா திரைப்படத்தில்  ‘சுத்தி சுத்தி வந்தீக’ பாடல் தான். அந்த பாடலில், நானும் அவரும் நன்றாக அறிமுகமாகி இருந்தோம். எங்களுக்குள் நல்ல பழக்கம் இருந்தது. 

பாடல் இடைவேளையில் அவர் என்னிடம், சாந்தி நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா என்று கேட்டார். உடனே நான் காதலித்து இருக்கிறேன் சார் என்று சொன்னேன். உடனே அவர் காதலித்தவர்களை கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொன்னதுடன், அவரை விடுத்து, வேறு யாரையாவது தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

இதைக் கேட்டவுடன் நான் அதிர்ச்சியாகி விட்டேன். உடனே நான் அவரிடம் ஏன் அப்படி சொல்கிறீர்கள் சார் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆமாம்.. அப்போதுதான் பின்னாளில் அந்த காதலியை பார்க்கும் பொழுது, வயிற்றுக்குள் ஜில் என்ற ஃபீல் கிடைக்கும். 

நிச்சயமாக நாம் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது.

அப்போது, அந்த காதல் வாழுகிறது அல்லவா? சாகவில்லை இல்லையா..? அதற்காகத்தான் அப்படி சொல்கிறேன். நிச்சயமாக நாம் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது. உடனே நான், அப்படியானால் உங்களுக்கு அந்த மாதிரியான அனுபவம் இருக்கிறதா சார் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆம் இருக்கிறதே என்று சொன்னார்.” என்று பேசினார். 

 

முன்னதாக, நான்கு ஆண்டுகளுக்குமுன் நடிகர் தேவன், தனது ’பாட்ஷா’ படத்தில் படித்த அனுபவங்களைப் பற்றி, இந்தியா கிளிட்ஸ் யூட்யூப் சேனலுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் நடிகர் ரஜினிகாந்தின் முதல் காதல் குறித்துத் தனக்குத் தெரியும் என்றும்; ரஜினி தனது முதல் காதலி குறித்து தன்னிடம் பகிர்ந்துள்ளதாகவும் ஒரு தகவலைக் கூறினார். 

அதில், ‘’பாட்ஷா படத்தில் நடிக்க கமிட் ஆனப்போ தான் ரஜினி சாரை விஜயவாஹினி ஸ்டுடியோவில் வைச்சு முதன்முதலில் சந்திச்சேன். அப்போது ஆனஸ்ட்ராஜ் படத்தில் என் நடிப்பைப் பார்த்த அவர் அதுகுறித்து மனம்திறந்து பாராட்டிப் பேசினார். நைட் ரூமில் ஒன்னா சேர்ந்து சாப்பிடலாம்னு சொன்னார்.

அப்போது ‘உங்கள் ஃபர்ஸ்ட் லவ் பத்தி சொல்லமுடியுமா?’ அப்படின்னு என்னிடம் கேட்டார். அது எல்லாருக்குமே இருக்குமே. அதைப் பத்தி சொல்லிட்டே இருக்கும்போது, ரஜினி சார் கொஞ்சம் டல்லாக ஆரம்பிச்சார்.

உடனே, நான் சார் உங்களுக்கு ஃபர்ஸ்ட் லவ் இருக்கானு கேட்டேன். இருக்குன்னு சொன்னார். அப்ப, அதைப் பத்தி சொல்லுங்கன்னு சொன்னேன். அப்படியே சொல்ல ஆரம்பிச்சார்.

பெங்களூருவில் ரஜினி சார், கண்டக்டராகப் பணியாற்றிய நாட்களில் இது நடந்திருக்கு. அப்போது டாக்டர் நிர்மலா என்ற பெண்ணை ரஜினி சார் விரும்பியிருக்கிறார். இருவருக்கும் பேருந்தில்தான் சந்திப்பு நடந்திருக்கு. ரஜினி சார் பணிபுரியும் பேருந்தில் நிர்மலா தொடர்ந்து பயணம் செஞ்சிருக்காங்க. இறுதியில் இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு நாள் ரஜினி நிர்மலாவை தனது மேடை நாடகம் குறித்துச் சொல்லி, அதனைப் பார்க்க அழைத்துள்ளார். நிகழ்ச்சியைப் பார்த்த நிர்மலா, ரஜினியின் நடிப்பில் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.

பின்னர் ரஜினியின் சார்பில் சென்னையில் உள்ள அடையாறு ஃபிலிம் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு, ரஜினிக்கே தெரியாமல் விண்ணப்பம் செய்திருக்கிறார், நிர்மலா. ஒரு நாள் அடையாறு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் இருந்து, நடிப்புப் பயிற்சி எடுக்கணும்னு ரஜினி சாருடைய பெங்களூரு அட்ரஸ்க்கு ஒரு கார்டு வந்திருக்கு. இதை எடுத்துட்டுப்போய் தனது காதலிகிட்ட சொல்லியிருக்கார், ரஜினி சார். அதை அப்ளை பண்ணுனது தான் தான், அப்படினு அவங்க சொல்லியிருக்காங்க. உடனே அங்கே போக தன்னிடம் பணம் இல்லை என்று ரஜினி சார் சொல்லி வருந்தியிருக்கிறார்.

அதை உணர்ந்த அந்தப் பெண், தனது கையில் இருந்த பணத்தைக் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். மீண்டும் பெங்களூரு வந்த ரஜினி சார், நிர்மலாவை பார்க்கப் போயிருக்கிறார். அங்கு ஒரு அதிர்ச்சியாக, நிர்மலாவும் அவரது குடும்பத்தினரும் தெரியாத இடத்துக்குப் போயிட்டதாக, அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இது ரஜினி சாரை நிலைகுலைய வைத்துள்ளது. தன் காதலி இல்லைன்னா, தான் இப்படி இருந்திருக்க முடியாது கண் கலங்கினார். அந்த வலியிலிருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக ரஜினி சார் புலம்பியிருக்கிறார்’ என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்