Metti Oli Leela: ‘கடைசியா என்ன பார்த்துட்டு கண்ண மூடிட்டா.. அவ இறந்தப்ப என் குழந்தை ரொம்ப நேரமா’ - மெட்டில் ஒலி லீலா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Metti Oli Leela: ‘கடைசியா என்ன பார்த்துட்டு கண்ண மூடிட்டா.. அவ இறந்தப்ப என் குழந்தை ரொம்ப நேரமா’ - மெட்டில் ஒலி லீலா

Metti Oli Leela: ‘கடைசியா என்ன பார்த்துட்டு கண்ண மூடிட்டா.. அவ இறந்தப்ப என் குழந்தை ரொம்ப நேரமா’ - மெட்டில் ஒலி லீலா

Kalyani Pandiyan S HT Tamil
Published May 19, 2024 06:00 AM IST

Metti Oli Leela: நான் தான் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டேன். என்னுடைய தம்பி ஆயுர்வேதிக் டாக்டர். அவன் என்னிடம், எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது என்று சொன்னான் - மெட்டி ஒலி லீலா

மெட்டி ஒலி லீலா பேட்டி
மெட்டி ஒலி லீலா பேட்டி

குழந்தை அழவில்லை. 

அதில் அவர் பேசும் போது, “என்னுடைய தங்கை இறந்த பொழுது என்னுடைய குழந்தை மிக நீண்ட நேரமாக அழவே இல்லை. அதன் பின்னர்தான் அவளுக்கு, சித்தி இல்லை என்பது உணர்வுக்கு வந்து, தேம்பி தேம்பி அழுதாள். உமா இறந்த சமயத்தில், அவள் சித்தி, அவளுடன் இருப்பது போலவே நினைத்துக் கொண்டு, வீட்டில் பேசுவாள். 

முதலில் நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. காரணம், மனதளவில் அவள், அவளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த காரணத்தால், அவள் இப்படி பேசுகிறாள் என்று விட்டு விட்டோம். ஆனால், அது பள்ளிக்கூடத்திலும் தொடர்ந்த நிலையில் அதை நாங்கள் நாங்கள் உற்று கவனிக்கத்தொடங்கினோம். அவள் என்னுடைய மகளுக்காக சில விஷயங்களை கொடுத்து இருக்கிறாள். 

என்னுடைய வீட்டில்தான் இருந்தாள்

அதை அவள் பார்க்கும் பொழுது, அவளுக்கு மீண்டும் அவளது நினைவுகள் நினைவுக்கு வருகின்றன. நிறைய விஷயங்களுக்கு நாம் காரணம் தேட முடியாது. அதனால் நாங்கள் என்னுடைய மகளிடம், சித்தி உன்னுடன் தான் இருக்கிறாள் என்று சொல்லிவிட்டோம். உமா என்னுடைய வீட்டில் தான் கிட்டத்தட்ட ஒரு மாதமாக இருந்தாள். 

நான் தான் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டேன். என்னுடைய தம்பி ஆயுர்வேதிக் டாக்டர். அவன் என்னிடம், எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது என்று சொன்னான். அதைக் கேட்ட பொழுது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. காரணம், என்னால் அந்த ஒரு தருணத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை. 

ஊருக்கு சென்று வருகிறேன் என்றாள்

இந்த நிலையில்தான் என்னுடைய கணவருடன் நான் ஊரில் இருந்து விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றாள். நாங்கள் அவளை பார்ப்பதற்காக மீண்டும் சென்றோம். நாங்கள் அந்த வீட்டில் நுழைந்தவுடன், அவள் என்னுடைய கண்ணை பார்த்து விட்டு, உடனே கண் மூடிவிட்டாள்.  

அதோடு அவளது ஆயுள் முடிந்துவிட்டது. அவள் இறைவனடி சேர்ந்து விட்டாள். இப்பொழுதும் எனக்கு ஏதாவது ஒரு காட்சியில், மிகவும் எமோஷனலாக அழ வேண்டும் என்று சொன்னால் அந்த ஒரு மொமண்டை நினைத்துக்கொள்வேன். அதை நினைத்த மாத்திரத்திலேயே என்னுடைய கண்ணில் தாரை தாரையாக  கண்ணீர் வந்துவிடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.