Karthi: ஹைதராபாத்துக்கு லட்டு... துபாய்க்கு குச்சு மிட்டாய்... வச்சு செய்த சாமி... வெளியான வீடியோ
Karthi: லட்டு இப்போ சென்சிடிவ்வான விஷயம். அதுனால இதபத்தி பேச வேணாம் என நடிகர் கார்த்தி கூறியது சர்ச்சையான நிலையில், இப்போது அவர் குச்சு மிட்டாயுடன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

மெய்யழகன் திரைப்படத்தை தெலுங்கிலும் படக்குழு வெளியிடும் நிலையில், அதற்கான ப்ரொமோஷன் நடைபெற்றது. அப்போது, தொகுப்பாளரின் கேள்விக்கு நடிகர் கார்த்தி நகைச்சுவையாக பதிலளிக்க அது சீரிஸான எதிர்வினையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மெய்யழகன் திரைப்படத்திற்கான ப்ரொமோஷன் பணிக்காக துபாய் சென்றது படக்குழு. அப்போது, நடிகர் கார்த்தியும், அரவிந்த் சாமியும் கையில் குச்சு மிட்டாயை வைத்துக் கொண்டு பேசிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதையடுத்து லட்டு பிரச்சனை முடிந்ததும் குச்சு மிட்டாய்க்கு வந்து விட்டீர்களா என பலரும் கார்த்தியை கிண்டல் செய்து வருகின்றனர்.
திருப்பதி லட்டு பிரசாதம் தயார் செய்யப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருக்கலாம் என்று வெளியான தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருள் ஆன நிலையில் பலரும் தங்களது விமர்சனங்களை முன் வைத்தனர்.