எப்படி நடிச்சுருக்காங்க... ரொம்ப அழுதுட்டேம்பா... மெய்யழகன் படத்தை பார்த்து கதறிய தோனி அப்பா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எப்படி நடிச்சுருக்காங்க... ரொம்ப அழுதுட்டேம்பா... மெய்யழகன் படத்தை பார்த்து கதறிய தோனி அப்பா

எப்படி நடிச்சுருக்காங்க... ரொம்ப அழுதுட்டேம்பா... மெய்யழகன் படத்தை பார்த்து கதறிய தோனி அப்பா

Kalyani Pandiyan S HT Tamil
Dec 08, 2024 07:19 PM IST

இப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. முழுக்க உணர்வுகளின் வாயிலாக கதையை பிரதிபலித்து ஒரு மாபெரும் வெற்றிப் படமாக 96 படத்தை உருவாக்கி இருந்தார்.

எப்படி நடிச்சுருக்காங்க... ரொம்ப அழுதுட்டேம்பா... மெய்யழகன் படத்தை பார்த்து கதறிய தோனி அப்பா
எப்படி நடிச்சுருக்காங்க... ரொம்ப அழுதுட்டேம்பா... மெய்யழகன் படத்தை பார்த்து கதறிய தோனி அப்பா

அந்த பதிவில், " மெய்யழகன் பிரமாதமான திரைப்படம். சிம்பிளாக, அழகாக இருந்தது. படத்தைப் பார்த்து நான் மிகவும் அழுதேன். படத்தில் இடம்பெற்ற என்னுடைய நண்பர் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு குழுவும் அவ்வளவு நேர்த்தியாக வேலை செய்திருப்பது மிகவும் சிறப்பு. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். குறிப்பாக படத்தின் இயக்குநர் பிரேம் குமாருக்கு என்னுடைய தனிப்பட்ட பாராட்டுகள்" என்று பதிவிட்டு இருக்கிறார். 

96 பட புகழ் இயக்குநர்

முன்னதாக, 96 பட புகழ் இயக்குநர் பிரேம், நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் நடித்து இருந்தார்.  மேலும் நடிகர் ராஜ்கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்தினை சூர்யா ஜோதிகாவின் பட நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்தது.  இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது. 

மெய்யழகன் ஓடிடி 

முதலில் மெய்யழகன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த அக்டோபர் 25 அன்று வெளியாகும் எனத்தகவல் வெளியாகி இருந்தது. பின்னர் அந்த தேதி தள்ளி வைக்கப்பட்டு அக்டோபர் 27 வெளியானது. 

வசூலில் தொய்வு 

இப்படம் வெளியான அதே தேதியில் நடிகர்கள் ஹரீஷ் கல்யாண் மற்றும் தினேஷ் நடித்த லப்பர் பந்து படம் வெளியாகி இருந்தது. லப்பர் படத்தின் மாபெரும் வெற்றியினால் மெய்யழகன் படத்தின் வசூல் சரியத் தொடங்கியது. மேலும் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த இரண்டாம் உலகப்போர் படமும் வெளியாகி இருந்தது. 

மெய்யழகன் படத்தின் மெதுவான திரைக்கதையினால் படம் எதிர்ப்பார்த்த வசூலை பெற வில்லை என சொல்லப்பட்டது. இருப்பினும் விமர்சன ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

6 ஆண்டுகள் இடைவெளி 

இயக்குனர் பிரேம் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவை வைத்து 96 படத்தை 6 வருடங்களுக்கு முன்பு வெளியானது. தனது பள்ளிப்பருவ காதலியை சந்தித்த கதாநாயகன் மற்றும் அந்த நாட்களில் நடந்த நிகழ்வுகளின் கோர்வையே படத்தின் கதையாக அமைந்தது. மேலும் 96 படம் ஒவ்வொருவரது பள்ளிப் பருவ காதலை மனதிற்குள் கொண்டு வந்தது. மேலும் இப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. முழுக்க உணர்வுகளின் வாயிலாக கதையை பிரதிபலித்து ஒரு மாபெரும் வெற்றிப் படமாக 96 படத்தை உருவாக்கி இருந்தார். 

 

6 ஆண்டுகளுக்கு பின் மெய்யழகன் வழியாக அதே உணர்வுகளை கதைகளின் வாயிலாகவும், அதன் கதாபாத்திரங்கள் வாயிலாகவும் கடத்தி இருப்பார். அருள்மொழி வர்மனாக அரவிந்த் சாமி மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பல ஆண்டுகளுக்கு பின் சொந்த ஊருக்கு வரும் அருள் மொழி வர்மனின் உணர்வுகளையும், உறவுகளையும் காட்டி ரசிகர்களை மனம் உருக வைத்தார் இயக்குநர் பிரேம். கிராமத்து ஆளாக வரும் கார்த்தி மிகவும் அற்புதமான வெள்ளந்தி காரராக வந்துள்ளார். படத்தின் கதையும், காட்சி அமைப்புகளும் பார்வையாளர்களை அவர்களது சொந்த ஊரின் நினைவுகளுக்கு கொண்டு செல்கிறது. 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.