தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Meet The Thalapathy Vijay Venkat Prabhu Goat Squad Wish You All Thegreatest Of Alltime Pongal

GOAT Pongal Poster: பொங்கல் தின பரிசா..? ..மொக்கையா இருக்கு.. கோட் போஸ்டரை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 15, 2024 11:42 AM IST

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019- ல் வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து தளபதி விஜய்யின் தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

கோட் புதிய போஸ்டர்!
கோட் புதிய போஸ்டர்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ம்ற்றும் டைட்டில் புத்தாண்டையொட்டி வெளியானது. அதன் படி, படத்திற்கு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டு இருப்பதும், விஜய் இந்தப்படத்தில் இருவேறு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் என்பதும் தெரியவந்தது. 

அதனைத்தொடர்ந்து வெளியான இரண்டாவது போஸ்டரும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொங்கல் தின பரிசாக கோட் படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. 

அந்த போஸ்டரில் விஜயுடன் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கின்றனர். மேலும் இதனை படக்குழு கோட் அணி என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். 

முந்தைய இரண்டு போஸ்டர்களை ஒப்பிடும் போது சிலர், இந்தப்போஸ்டர் சுமாராக உள்ளதாகவும் சிலர் நன்றாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

 

முன்னதாக, ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019- ல் வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து தளபதி விஜய்யின் தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

ஜெமினி மேன் படத்தில் வில் ஸ்மித் மூன்று ரோலில் நடித்திருப்பார். அப்படியானால் விஜய்க்கு இந்த படத்தில் மூன்று ரோல் இருக்கலாம் எனவும், மற்றொரு கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்திருப்பார்கள் எனவும் பேச்சு அடிபடுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.