Meenakshi Ponnunga: வெற்றியை கைது செய்ய நடக்கும் சதி, கடுப்பான ஷக்தி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்
துர்காவும் யமுனாவும் சக்தியும் மீனாட்சி திரும்பி வரவேண்டும் என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க அப்போது தீபம் அணைந்து விட அபசகுனமாக தெரிய அனைவரும் வருத்தப்படுகிறார்கள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றி சக்தியை தன் காலில் விழச் சொல்கிறான். யமுனா துர்காவும் சக்தியிடம் வெற்றியிடம் மன்னிப்பு கேள் என்று சொல்கிறார்கள்.
சக்தி வெற்றியிடம் எனக்கும் ஒரு காலம் வரும் என்று சொல்கிறாள். இரவில் சாந்தா மீனாட்சிக்கு போன் செய்ய மீனாட்சி போனில் பேசுகிறாள். அப்போது கூடிய விரைவில் வருகிறேன் என்று பேசும்பொழுது ஒரு பெட்ரோல் பாம் போன் பூத்தின் மேல் விழ போன் பூத் பற்றி எரிகிறது.
இதனையடுத்து துர்காவும் யமுனாவும் சக்தியும் மீனாட்சி திரும்பி வரவேண்டும் என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க அப்போது தீபம் அணைந்து விட அபசகுனமாக தெரிய அனைவரும் வருத்தப்படுகிறார்கள்.
புஷ்பாவும் சங்கிலியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர ஏற்கனவே வெற்றியால் அவமானப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டர் மாற்றல் ஆகி அந்த ஸ்டேஷனுக்கு வர புஷ்பா இன்ஸ்பெக்டரிடம் சென்று பேசி வெற்றியை எப்படியாவது கைது செய்யுங்கள் என்று லஞ்சம் கொடுக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.