Tamil News  /  Entertainment  /  Maya Roasts Netizens For Thinking And Congratulating Vj Archana

Big Boss 7 Title Winner: விஜே அர்ச்சனாவை யோசித்து பார்த்து வாழ்த்திய மாயா - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Marimuthu M HT Tamil
Jan 16, 2024 05:30 PM IST

விஜே அர்ச்சனாவை எக்ஸ் தளத்தில் வாழ்த்திய மாயாவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அர்ச்சனாவை யோசித்து பார்த்து வாழ்த்திய மாயா - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
அர்ச்சனாவை யோசித்து பார்த்து வாழ்த்திய மாயா - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 7க்கான கிராண்ட் ஃபினாலே ஜனவரி 14 ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. விஜே அர்ச்சனா பிக் பாஸ் தமிழ் 7ஆவது சீசன் டைட்டில் கோப்பையை வென்றார். அவருக்கு 50 லட்ச ரூபாய்க்கான காசோலை, கார் மற்றும் கோவையில் பிளாட் ஆகியவை வழங்கப்பட்டன. 

இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயா 23,054 வாக்குகளைப்பெற்று மூன்றாவது இடத்தையும், மறுபுறம், அர்ச்சனா 1,09,468 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தையும் பெற்று டைட்டில் வின்னர் ஆனார். முதல்முறையாக பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் இறுதிப்போட்டியாளர்களாக இரண்டு பெண்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அர்ச்சனாவின் வெற்றியைப் பலரும் கொண்டாடி வருகிறார்கள். மறுபக்கம் அவர் பெயிட் புரோமோஷன் செய்து, டைட்டிலை வென்றார் என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் முடிந்தாலும், அதில் பங்கேற்று வெளியில் வந்தவர்களின் அலப்பறை இன்னும் முடியவில்லை. மாயா இன்று தனது எக்ஸ் பதிவில் விஜே அர்ச்சனா குறித்து பதிவிட்டதாவது, ‘டியர் அர்ச்சனா. டைட்டிலை வென்றதற்கு வாழ்த்துகள். நீ நினைச்ச மாதிரி உன் வாழ்க்கையில் பூ பூக்கும். செடி வாடிபோற மாதிரி இருந்த என்ன கூப்பிடு. நான் வந்து தண்ணி ஊத்துறேன். நான் உறுதியாக, அந்த சூழலில் உன்னுடன் இருப்பேன். பூ பூக்கும் நண்பா’ என மாயா தெரிவித்துள்ளார். 

இதை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்துவருகின்றனர். அதில் எக்ஸ் பதிவர் ஒருவர், ‘’டியர் அர்ச்சனா,  பாம்பை கூட நம்பலாம், மாயாவை நம்பாதே. அந்தச் செடி சும்மா விட்டாலே நல்லா பூ பூக்கும். நீ போய் அவுங்க வாழ்க்கைல நுழைஞ்சு வெசத்தை காக்காம இருந்தாலே போதும்’’ என்றார்.

மற்றொரு நெட்டிசன், ‘’ உன் வாழ்க்கையில் எல்லா செடியும் வாடி போகும்டி. அன்னைக்கு இருக்கு உனக்கு. காசுக்காக போயும் போயும் கேவலமாய் பேசுனேல. கர்மா விடாது’ எனப் பதிவிட்டுள்ளார். 

இன்னொருவர், ‘’நீங்க ஷோவில் ஊத்திய தண்ணி போதாதா. அந்த தண்ணியில் ஒரு புல் கூடமுளைக்காது'' என்றார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel
பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.