சந்தனகடத்தல் வீரப்பன் காடு வெட்டி குரு சமாதியில் வெளியான மாவீரன் பிள்ளை போஸ்டர்
Maaveeran Pillai:வீரப்பனின் நினைவிடம் மற்றும் காடுவெட்டி குருவின் நினைவிடம் சென்று மாவீரன் பிள்ளை வெளியிட்ட படக்குழு இன்று பாடலை வெளியிட உள்ளது.

மாவீரன் பிள்ளை திரைப்படத்தின் போஸ்டரை சந்தன கடத்தில் வீரப்பன் மற்றும் காடு வெட்டி குரு சமாதிகளில் அவரது மகள் வெளியிட்டுள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பனின் இளையமகள் விஜயலட்சுமி மாவீரன் பிள்ளை என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
கே என் ஆர் மூவிஸ் சார்பில் கே என் ஆர் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் மாவீரன் பிள்ளை. இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு தமிழக அதிரடிப்படையினரால் சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டார். வீரப்பனின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் சில தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி அப்பாவின் பெயரை சொல்லும் வகையில் மாவீரன் பிள்ளை என்ற படத்தில் நடித்துள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பனுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகள் வித்யாராணி இளையமகள் விஜயலெட்சுமி.
வித்யாராணி ஏற்கனவே பாஜகாவில் இணைந்த நிலையில் விஜய லட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை முக்கியம் என்பது குறித்தும் ஜாதி பிரச்சனைகளை பேசும் வகையில் மாவீரன் பிள்ளை என்ற படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டீசரில் எங்க பொண்ணுக மேல கை வைச்சி பாரு கிழிச்சு தொங்க விட்டுடுவாளுங்க. எல்லா சரக்கையும் அடிச்சு உடைங்கடா போன்ற வசனங்கள் வெளியானது .
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 23 ஆம் தேதி (இன்று) சென்னை பிரசாத் லேபில் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு நாயகன் ராஜாவும் வீரப்பன் மகள் விஜயலட்சுமியும் வீரப்பனின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி இப்படத்தின் போஸ்டரை அங்கே வெளியிட்டார்கள்..
பிறகு காடுவெட்டி குருவின் நினைவிடம் சென்று அங்கேயும் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்