முத்துவேல் பாண்டியன் பராக்..ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கூடிய கூட்டம்.. சன் ரூஃபில் என் ட்ரி கொடுத்த ரஜினி!- வைரல் வீடியோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  முத்துவேல் பாண்டியன் பராக்..ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கூடிய கூட்டம்.. சன் ரூஃபில் என் ட்ரி கொடுத்த ரஜினி!- வைரல் வீடியோ!

முத்துவேல் பாண்டியன் பராக்..ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கூடிய கூட்டம்.. சன் ரூஃபில் என் ட்ரி கொடுத்த ரஜினி!- வைரல் வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 23, 2025 01:34 PM IST

ரஜினிகாந்த், காரின் சன் ரூஃப் வழியாக வெளியே வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.

முத்துவேல் பாண்டியன் பராக்..ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கூடிய கூட்டம்.. சன் ரூஃபில் என் ட்ரி கொடுத்த ரஜினி!- வைரல் வீடியோ!
முத்துவேல் பாண்டியன் பராக்..ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கூடிய கூட்டம்.. சன் ரூஃபில் என் ட்ரி கொடுத்த ரஜினி!- வைரல் வீடியோ!

இந்த நிலையில் அவர்களைப் பார்த்த ரஜினிகாந்த், காரின் சன் ரூஃப் வழியாக வெளியே வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அவரை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மையில், இந்தப்படத்தின் இயக்குநர் நெல்சன் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை 41 வது பிறந்தநாளை ரஜினிகாந்துடன் கொண்டாடினார். அது தொடர்பான புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. அதில், ரஜினிகாந்த் நெல்சனுக்கு பூங்கொத்து வழங்கும் புகைப்படமும், யோகி பாபு அவருக்கு கேக் ஊட்டும் புகைப்படமும் இடம் பெற்று இருந்தன.

ஜெயிலர் 2 பற்றி

கடந்த 2023 ம் ஆண்டு நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தது. அந்த வெற்றியின் காரணமாக தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன் அவரது மனைவி விஜயா என்கிற விஜியாக நடித்துள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது. கடந்த பாகத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஆகியோர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில், இந்தபாகத்திலும் அவர்கள் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.