Marumagal Serial: ‘அடியே மவளே பல்லு பேந்துரும் ஜாக்கிரதை..அம்மனாக ஆடிய ஆதிரை! -மருமகள் சீரியல் அப்டேட்!-marumagal serial today promo episode on september 23 2024 indicates aadhirai warn velvili - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: ‘அடியே மவளே பல்லு பேந்துரும் ஜாக்கிரதை..அம்மனாக ஆடிய ஆதிரை! -மருமகள் சீரியல் அப்டேட்!

Marumagal Serial: ‘அடியே மவளே பல்லு பேந்துரும் ஜாக்கிரதை..அம்மனாக ஆடிய ஆதிரை! -மருமகள் சீரியல் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 23, 2024 09:38 AM IST

Marumagal Serial: இந்த வெறும் பயலுக்கு கல்யாணம் நடப்பது தான் பெரிதாக தெரிகிறது அல்லவா? என்று கேட்க, கொதித்தெழுந்த ஆதிரை, தேவையில்லாமல் ஏதாவது இப்படி என்னிடம் பேசிக் கொண்டிருந்தால், அடித்து பல்லை பேர்த்துக் கொடுத்து விடுவேன் என்று எச்சரித்தாள் - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: ‘அடியே மவளே பல்லு பேந்துரும் ஜாக்கிரதை..அம்மனாக ஆடிய ஆதிரை! -மருமகள் சீரியல் அப்டேட்!
Marumagal Serial: ‘அடியே மவளே பல்லு பேந்துரும் ஜாக்கிரதை..அம்மனாக ஆடிய ஆதிரை! -மருமகள் சீரியல் அப்டேட்!

அப்போது ஆதிரையிடம், வேல்விழி பிரபுவை குறிப்பிட்டு, உனக்கு இந்த வெறும் பயலுக்கு கல்யாணம் நடப்பது தான் பெரிதாக தெரிகிறது அல்லவா? என்று கேட்க, கொதித்தெழுந்த ஆதிரை, தேவையில்லாமல் ஏதாவது இப்படி என்னிடம் பேசிக் கொண்டிருந்தால், அடித்து பல்லை பேர்த்துக் கொடுத்து விடுவேன் என்று எச்சரித்தாள்.”  உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்று இருந்தன. 

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

மருமகள் சீரியலின் நேற்றைய எபிசோடில் தன்னுடைய அப்பாவிடம் பிரபு பிரச்சினை செய்ததில் கோபமாக இருந்த ஆதிரை, பிரபுவிடம் பேசாமல் இருந்தாள். இதையடுத்து பிரபு ஆதிரைக்கு போன் செய்து, மன்னிப்பு கேட்டான். ஆனால் ஆதிரையோ, என்னிடம் நீங்கள் என்ன செய்திருந்தாலும் பரவாயில்லை, ஆனால் என்னுடைய அப்பாவிடம் நீங்கள் பிரச்சினை செய்திருக்கிறீர்கள். ஆகையால் உங்களை என்னால் மன்னிக்க முடியாது என்றாள்.

மேலும், இப்படி என்னை நீங்கள் பேசும்படி தொந்தரவு செய்து கொண்டிருந்தால், நான் கல்யாணத்தை நிறுத்தி விடுவேன் என்று சொல்ல, அதிர்ந்து போன பிரபு, சாரி என்று சொல்லி போனை வைத்து விட்டான். இதையடுத்து ஆதிரை பிரபுவின் மீது பாவப்பட்டாலும், அப்பாவின் விஷயத்தில் அவர் இப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. அதனால் அவரை இரண்டு நாட்கள் அலைய விடுவோம் என்று முடிவு எடுத்தாள். அவள் அப்படி முடிவு எடுத்த அடுத்த கணமே, பிரபுவிடம் இருந்து சாரி என்று மெசேஜ்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன.

தோப்புக்கரணம் போட வைத்த ஆதிரை

அதை பார்த்து அவள் சந்தோஷப்பட்டாள். இதற்கிடையே கல்யாண பத்திரிக்கை ரெடியான நிலையில், தில்லையும் பிரபுவின் தம்பியும் பத்திரிகையை சிவப்பிரகாசத்திடம் கொடுத்து கோயிலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, அவரது வீட்டிற்கு கிளம்பினர். இந்த நிலையில் ஆதிரைடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பிரபு, தில்லையிடம் நான் ஆதிரை வீட்டுக்குச் சென்று பத்திரிகையை கொடுத்து வருகிறேன் என்று சொல்லி சிவப்பிரகாசம் வீட்டிற்குச் சென்றான்.

வீட்டிற்கு பிரபு வருவதை பார்த்த ஆதிரை அகல்யாவிடம் தான் வீட்டில் இல்லை என்று பிரபுவிடம் சொல்லும்படி அனுப்பினாள் அதையும் பிரபு நம்பினான். இதன் பிறகு வந்த சிவப்பிரகாசத்திடம் பத்திரிக்கையை கொடுத்து விட்டு பிரபு கிளம்பும் போது, வெளியே சென்ற ஆதிரை வீட்டிற்கு வரும் போது இதனை சொல்லி விடுங்கள் என்று சொல்ல, குழம்பிய சிவப்பிரகாசம், ஆதிரை வீட்டில் தான் இருக்கிறாள். அவளிடம் ஏன் சொல்ல வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து ஆதிரை பொய் கூறினால் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆதிரை ரூமிற்கு சென்ற பிரபு, ஆதிரையிடம் மன்னிப்பு கேட்டான். அதற்கு அவள் அடிபணியாத போது, வேண்டுமென்றால் தோப்புக்கரணம் போடுகிறேன் என்று சொல்ல,போடுங்கள் என்றாள் ஆதிரை. அத்தோடு நேற்றைய எபிசோடு நிறைவடைந்தது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.