Marumagal Serial: உண்மை தெரிந்தது.. பிரபு திருமணம் பேச்சு கை கூடுமா? - மருமகள் சீரியலின் இன்றைய ப்ரோமோ
Marumagal Serial: பிரபு, ” ஏகாம்பரத்தையும் அவரது குடும்பத்தையும் பெண் பார்க்க அழைத்து செல்லாலம் என சொல்லும் போதே வேண்டாம் என சொன்னேன். இந்த கல்யாணத்தை நிறுத்தியது, வேல்விழி தான் “ என்று கோபத்துடன் குடும்பம் முன்பு சொல்கிறார்.

Marumagal Serial: தமிழ் பார்வையாளர்கள் சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர்களை அதிகம் பிரித்து பார்ப்பதில்லை. இரண்டிற்கும் அதே அளவு அன்பையும், பாராட்டுகளையும் பொழிகிறார்கள்.
தமிழ் தொலைக்காட்சித் துறையானது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பிராந்திய சேனல்களிலும் டிவி சோப்புகளுடன் வளர்ந்து வருகிறது. மதியம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை விட இரவில் ஒளிபரப்பபடும் சீரியல்களே இல்லத்தரசிகளை ஈர்க்கின்றன.
டி. ஆர். பியில் மாஸ்
அதே சமயம் ஃபிரைம் டைம் சீரியல்கள் அனைத்து தரப்பு மக்களையும் தங்கள் திரையில் கவர்ந்து. அதிக டி. ஆர். பியில் களுக்கு வழிவகுக்கும். அப்படி டி. ஆர். பியில் மாஸ் காட்டி வரும் புது சீரியல், மருமகள். தினமும் சன் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
மருமகள் சீரியலில் இன்று
இந்நிலையில் மருமகள் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 1 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பிரபு, ” ஏகாம்பரத்தையும் அவரது குடும்பத்தையும் பெண் பார்க்க அழைத்து செல்லாலம் என சொல்லும் போதே வேண்டாம் என சொன்னேன். இந்த கல்யாணத்தை நிறுத்தியது, வேல்விழி தான் “ என்று கோபத்துடன் குடும்பம் முன்பு சொல்கிறார்.
மறுபக்கம் பிரபுவின், சித்தப்பா, “ வீடு புகுந்து ஒரு பெண் என் பொண்ணை அடித்துவிட்டு சென்றாள், அவளை நான் சும்மா விட மாட்டேன் “ என்றார்.
திருமணம் விஷயத்தில் என்ன நடக்க போகிறது
வேல்விழியின் தாய்யை, ஆதிரா வீட்டின் முன்பு சந்தித்து பேசுகிறார். ” என் வீட்டில் அனைவரும் நல்லவர் தான் என சொல்ல, உடனே ஆதிரா, ஒரு பையனை தவிர “ என சொல்வதுடன் ப்ரோமோ முடிந்தது.
பிரபு திருமணம் விஷயத்தில் என்ன நடக்க போகிறது என்பதை சன் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு பார்த்து தெரிந்து கொள்வோம்.
நேற்றைய எபிசோட்
மருமகள் சீரியலில் நேற்று எப்படி தான் தனக்கு திருமணம் நடக்க போகிறது என்ற கவலையில் நண்பரை வீட்டிற்கு அழைத்தார் பிரபு. பிரபு, வீட்டில் இருக்கும் அனைவரும் திருமணத்திற்கு பெண் பார்த்து இருக்கும் விஷயத்தை சொல்லி எப்படியாவது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்.
நண்பருடன் பூங்காவில் பிரபு அமர்ந்து கொண்டு பேசுகிறார். அப்போது அங்கு வந்த கயல்விழி வழக்கம் போல் பிரபுவிடம் வம்பு செய்கிறார். திருமணம் பேச்சை நிறுத்தியது தான் என்றும், எப்படியும் திருமணம் பண்ண விட முடியாது என சபதம் போடுகிறார். தன் திருமணத்தை நடத்தி காண்பிக்கிறேன் என ஒரு முடிவுடன் பிரபு இருக்கிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
