மர்மங்கள் நிறைந்த பயணம்..மர்மதேசம் தொடர் டச்சில் வெளியாகியிருக்கும் ஐந்தாம் வேதம் ட்ரெய்லர்! எப்போது எங்கு பார்க்கலாம்?
மர்மங்கள் நிறைந்த பயணமாக, 90ஸ்களில் பலரின் பேவரிட் சீரியலாக இருந்த மர்மதேசம் தொடர் டச்சில் வெளியாகியிருக்கிறது இயக்குநர் நாகாவின் ஐந்தாம் வேதம் ஓடிடி சீரிஸ் ட்ரெய்லர். இந்த சீரிஸ் எப்போது ஸ்டிரீமிங் ஆகும் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

மர்மங்கள் நிறைந்த பயணம்..மர்மதேசம் தொடர் டச்சில் வெளியாகியிருக்கும் ஐந்தாம் வேதம் ட்ரெய்லர்! எப்போது எங்கு பார்க்கலாம்?
90ஸ்களில் ஒளிபரப்பான டிவி சீரியல்களில் ரசிகர்களை பெரிது கவர்ந்த மர்ம தேசம் சீரிஸில் விடாது கருப்பு, ரகசியம், எதுவும் நடக்கும் தொடர்களை இயக்கிய நாகா இயக்கியிருக்கும் புதிய த்ரில்லர் ஓடிடி சீரிஸ் ஐந்தாம் வேதம். இதையடுத்து இந்த சீரிஸின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மர்மங்கள் நிறைந்த பயணம்
மர்மதேசம் சீரிஸ்களின் டச்சுடன் மர்மங்கள் நிறைந்திருக்கும் ஐயங்கார்புரம் என்ற ஊரில் இருக்கும் பழமையான கோயிலை நோக்கி தன்ஷிகா மேற்கொள்ளும் பயணமும், அப்போது அவர் சந்திக்கும் அமானுஷ்ய எதிர்விளைவுகளுமே இந்தி சீரிஸின் கதையாக இருப்பதாக தெரிகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஐந்தாம் வேதம் ஃபஸ்ட் லுக் மோஷன் போஸ்டரும், அதைத்தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன் டீசரும் வெளியானது.