Mari Selvaraj: ‘ஏய் மன்னா.. மாமன்னா..’ ரஜினியுடன் இணைந்து படம் செய்வது எப்போது? - மாரிசெல்வராஜ் பேட்டி!-mari selvaraj reveals exciting details about his upcoming collaboration with rajinikanth - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mari Selvaraj: ‘ஏய் மன்னா.. மாமன்னா..’ ரஜினியுடன் இணைந்து படம் செய்வது எப்போது? - மாரிசெல்வராஜ் பேட்டி!

Mari Selvaraj: ‘ஏய் மன்னா.. மாமன்னா..’ ரஜினியுடன் இணைந்து படம் செய்வது எப்போது? - மாரிசெல்வராஜ் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 22, 2024 08:14 AM IST

Mari Selvaraj: இயக்குநர் மாரிசெல்வராஜ் ரஜினியுடன் தான் இணையும் படம் குறித்து பேசி இருக்கிறார். - மாரிசெல்வராஜ்

Mari Selvaraj: ‘ஏய் மன்னா.. மாமன்னா..’ ரஜினியுடன் இணைந்து படம் செய்வது எப்போது? - மாரிசெல்வராஜ் பேட்டி!
Mari Selvaraj: ‘ஏய் மன்னா.. மாமன்னா..’ ரஜினியுடன் இணைந்து படம் செய்வது எப்போது? - மாரிசெல்வராஜ் பேட்டி!

ரஜினியுடன் இணைவது எப்போது?

அப்போது அவரிடம் நீங்கள் ரஜினிகாந்துடன் இணைகிறீகளா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “ எனக்கு ரஜினிகாந்தை பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். எங்கள் இருவருக்குமே, நாங்கள் இணைந்து படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

என்னுடைய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய திரைப்படங்களை பார்த்த பின்னர் அவர் என்னை அழைத்து உரையாடினார். இந்தத்திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு இந்தப்படம் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

மாரிக்கு ஆதரவாக நின்ற பா.ரஞ்சித்

வாழை திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “மாரி செல்வராஜ் போன்று வலிநிறைந்த படங்களை எடுக்கும் பொழுது அதைப்பார்த்து சோகமாக விமர்சனம் செய்யும் நபர்கள், கர்ணன் படத்தில் எதிர்த்து அடிக்கும் பொழுது அவன் வன்முறையை பெருமையாக காட்ட முயற்சிக்கிறான் என்று விமர்சனம் செய்கிறார்கள். அப்படி என்றால் நாங்கள் எப்படிப்பட்ட படங்களை தான் எடுக்க வேண்டும்.

மிகச் சிறந்த படம்

மாரி செல்வராஜ் இயக்கிய படங்களில் பரியேறும் பெருமாள் தான் மிகச் சிறந்த படம் என்று பலர் கூறுகிறார்கள். அப்படியானால் கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் மொக்கை படங்களா? ஏனென்றால் அந்த படங்களில் கதாநாயகன் திருப்பி அடிக்கிறான். அவன் ஏன் திருப்பி அடிக்கிறான். அந்தச் சூழ்நிலையை இந்த சமூகம் ஏன் அவனுக்கு உருவாக்கி கொடுத்திருக்கிறது.

அந்த கேள்வியை நீ உன்னிடம் எப்போது கேட்டுக் கொள்ளப் போகிறாய். அப்படி என்றால், நீ என்னை கொடுமைப்படுத்தி இருக்கிறாய், நான் கவலையாக இருக்கிறேன் என்று உன் மனதை வருடி நான் சொல்லும்போதுதான், நீ இறங்கி வருவாயா என்ற கேள்வி இங்கு விழுகிறது. அதை உடைத்து தான் மாரி செல்வராஜ் மாமன்னன், கர்ணன், வாழை உள்ளிட்ட படங்களை எடுத்து இருக்கிறான்.

மிஷ்கின் பேச்சு!

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிஷ்கின் பேசியதாவது, “ “உண்மையில் ஒரு நல்ல படம் பார்த்தால், ஒரு வாரம் அந்த படத்தை பற்றி அலசி ஆராய்வதுதான் என்னுடைய வேலையாக இருக்கும். அதேபோல ஒரு மோசமான படத்தை பார்த்து விட்டால், அந்த ஒரு வாரம் முழுக்க எனக்கு காய்ச்சல் வந்தது போல இருக்கும். ஆனால் வாழை படத்தை பார்த்த பிறகு, மாரியின் கிராஃப்ட்டை பார்த்து நான் அப்படி அதிர்ச்சியாகி நின்றேன்.

வாழை படத்தில் ஒரு 8,9 வயது பையனுக்குள் இருக்கும் நட்பு,காதல், சோகம் உள்ளிட்ட உணர்வுகளை மாரி நம்மிடையே காண்பித்து இருக்கிறான். ஒருவன் இறக்கும் தருவாயில் அவனுக்கு அவன் சிறுவயதில் சந்தோஷமாக இருந்த இமேஜும், சோகமாக இருந்த இமேஜும் நினைவுக்கு வரும்.

கலைஞனால் மட்டும்தான் செய்ய முடியும்!

அதை சாதாரண மனிதர்கள் வெளியே சொல்லலாம் ஆனால் அதனை ஒரு கலைஞனால் மட்டும்தான் அதை ஒரு நாவலாகவோ அல்லது வேறொரு படைப்பாகவோ படைக்க முடியும். அகிரா குரசேவா உங்களுக்கு இந்தியாவைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் பதேர் பாஞ்சாலி படத்தை பாருங்கள் என்று சொல்வார். நான் சொல்கிறேன், நீங்கள் தமிழ்நாட்டைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், வாழை படத்தை பாருங்கள்.

இந்த படத்தில் ஒரு டீச்சர் கதாபாத்திரம் வருகிறது. அந்த கதாபாத்திரத்திற்கும், குழந்தை கதாபாத்திரத்திற்கும் இடையேயான உரையாடல்கள் அவ்வளவு அழகாக வந்திருக்கிறது. அந்த டீச்சரையும் அவன் மலையாளத்தில் இருந்து தான் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான். தமிழ்நாட்டில் டீச்சர்களே இல்லை போல..

நாகரிகமாக பேசி இருக்கிறேன்

இன்று தான் நான் மிகவும் நாகரிகமாக பேசி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் மிகவும் சந்தோஷமாகவும், வருத்தமாகவும் இந்த மேடையை விட்டு இறங்குகிறேன். என்னைப் பற்றி திட்டுகிறவர்களுக்கு எதுவுமே கன்டென்ட் கொடுக்கவில்லையே என்று மனது வருத்தப்படுகிறது. கொட்டுக்காளி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நான் ஆக்ரோஷமாக பேசினேன். குத்து டான்ஸ் ஆடினேன். அதற்கு பெரிய மரியாதை கிடைத்தது. கிட்டத்தட்ட 50 பேர் காணொளிகளை வெளியிட்டு என்னை பயங்கரமாக திட்டினார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.