‘பரியேறும் பெருமாள் கதையை கேட்ட முதல் ஹீரோ அதர்வாதான்.. என்ன ஷாக்கா இருக்கா..?’ - மாரிசெல்வராஜ் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘பரியேறும் பெருமாள் கதையை கேட்ட முதல் ஹீரோ அதர்வாதான்.. என்ன ஷாக்கா இருக்கா..?’ - மாரிசெல்வராஜ் பேச்சு!

‘பரியேறும் பெருமாள் கதையை கேட்ட முதல் ஹீரோ அதர்வாதான்.. என்ன ஷாக்கா இருக்கா..?’ - மாரிசெல்வராஜ் பேச்சு!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 11, 2025 02:30 PM IST

நான் எடுத்த முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் படத்தின் முதல் ஹீரோ அதர்வா தான். என்ன அதர்வா.. ஷாக்காக இருக்கிறதா.. -மாரிசெல்வராஜ் பேச்சு!

‘பரியேறும் பெருமாள் கதையை கேட்ட முதல் ஹீரோ அதர்வாதான்.. என்ன ஷாக்கா இருக்கா..?’ - மாரிசெல்வராஜ் பேச்சு!
‘பரியேறும் பெருமாள் கதையை கேட்ட முதல் ஹீரோ அதர்வாதான்.. என்ன ஷாக்கா இருக்கா..?’ - மாரிசெல்வராஜ் பேச்சு!

புரிதலோடு இருந்தது.

அவர் பேசும் போது, ‘நெல்சன் மிகவும் கனமான கதைகளை தேர்ந்தெடுத்து செய்கிறார். அவரின் படங்களை பார்க்கும் பொழுது, இவருக்கு என்ன வயது இருக்கும் என்று நினைத்திருக்கிறேன். அவரின் ஒரு நாள் கூத்து படத்தை பார்க்கும் பொழுது, அவர் அந்தப்படத்தை ஆரம்பித்த விதம் மிக மிக புரிதலோடு இருந்தது.

அதை அவர் இப்போதைய ஜெனரேஷன் மக்கள் பார்ப்பார்களா என்பது குறித்தெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அவருக்கு இப்படியான கதையை இப்படி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. அதன்படி அவர் செய்தார். எங்களது ஜெனரேஷனில் அவர் தனியாக இருக்கிறார். அவரின் மான்ஸ்டர் திரைப்படத்தில் கூட, சென்சிபிளான காமெடியைத்தான் முன் வைத்திருந்தார்.

டி.என்.ஏ படம் நாம் இயல்பாக இருந்து பழகி பார்த்த இடங்களுக்குள் இருக்கும் கதையை உங்களுக்கு காண்பிக்கும். நான் எடுத்த முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் படத்தின் முதல் ஹீரோ அதர்வா தான். என்ன அதர்வா.. ஷாக்காக இருக்கிறதா.. அப்படித்தான் இருக்கும். அவர் நடித்த பரதேசி திரைப்படத்தை பார்த்தேன்.

பரியேறும் பெருமாள் கதை

அந்தப்படத்தை பார்த்துவிட்டுதான் பரியேறும் பெருமாள் கதையை அவரிடம் கூறினேன். இயல்பாகவே நான் முரளி சாரின் மிக பயங்கரமான ஃபேன். காரணம், ஒருதலை காதல்களை அதிகமாக செய்தவர் முரளி சார் தானே.

அவருடைய பையன் அதர்வா என்று கேள்விப்பட்டதும், அவர் நிச்சயம் இந்தக் கதைக்கு ஒத்துக் கொள்வார் என்று தான் நினைத்தேன். ஆனால், சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தை செய்ய முடியாமல் போனது. அன்றைய நாள் மிகவும் நான் வருத்தப்பட்டேன். அவருக்கே இந்தக் கதை பிடிக்கவில்லையே… வேறு யாருக்கும் பிடிக்கும் என்றெல்லாம் யோசித்தேன். அவருக்கு இருக்கும் தகுதிக்கு அவர் இன்னும் அதிகமாக முன்னே செல்லக் செல்ல வேண்டும்’ என்று பேசினார்.

படக்குழு விபரம்

ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற ரசிக்கும் விதமான திரைப்படங்களை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். மெனக்கெடும் இயக்குனர்களில் ஒருவர். இந்த முறை க்ரைம், ஆக்‌ஷன், டிராமா நிறைந்த ‘டிஎன்ஏ’ திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

இந்தப்படத்தில் அதர்வா மற்றும் நிமிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டாடா உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ், இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. ஜிப்ரான் பின்னணி இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தில் 5 இசையமைப்பாளர்கள் 5 பாடல்களுக்கு இசையமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.