Mansoor:'கிளியை வளர்த்து பாழுங்கிணற்றில் தள்ளிட்டீயே நாட்டாமை'- பாஜகவில் இணைந்த சமக குறித்து மன்சூர் அலிகான் ரியாக்‌ஷன்!-mansoor ali khans reaction to smk joining the bjp dont grow a parrot and plant it in a waste pond - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mansoor:'கிளியை வளர்த்து பாழுங்கிணற்றில் தள்ளிட்டீயே நாட்டாமை'- பாஜகவில் இணைந்த சமக குறித்து மன்சூர் அலிகான் ரியாக்‌ஷன்!

Mansoor:'கிளியை வளர்த்து பாழுங்கிணற்றில் தள்ளிட்டீயே நாட்டாமை'- பாஜகவில் இணைந்த சமக குறித்து மன்சூர் அலிகான் ரியாக்‌ஷன்!

Marimuthu M HT Tamil
Mar 14, 2024 02:58 PM IST

Mansoor Ali Khans reaction to SMK joining the BJP: பாஜகவில் இணைந்த சமத்துவ மக்கள் கட்சி குறித்து மன்சூர் அலிகான் அடித்த கமெண்ட் நகைப்புக்குள்ளாகியுள்ளது.

பாஜகவில் இணைந்த சமக குறித்து மன்சூர் அலிகான் ரியாக்‌ஷன்
பாஜகவில் இணைந்த சமக குறித்து மன்சூர் அலிகான் ரியாக்‌ஷன்

அதற்குப் பதிலளித்த அவர், ‘’கிளியை வளர்த்து பாழுங்கிணற்றில் தள்ளிட்டீயே நாட்டாமை அப்படிங்கிறீயா. நடிகர் சரத் குமார் அவர்கள் நல்ல நடிகர். எனக்கு மூத்தவர். அர்த்த ராத்திரியில் எழுப்பி ஏன் பொண்டாட்டியை எழுப்பி கேட்கிறீங்க அப்படின்னு எல்லாம் சொல்லக்கூடாது. அது அவங்க பிரச்னைப்பா. இப்ப நீங்க கேட்க வந்ததை கேளுங்கள். கொஞ்ச நேரம் சிரிக்கலாம்னு சிரிச்சேன். நாளைக்கு என் கட்சியையும் சொல்வீங்க’’ என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் நீங்களும் எதிர்காலத்தில் சரத் குமார் போல், கட்சியை வேறு ஒரு கட்சியில் இணைத்துவிடுவீர்களா எனக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த மன்சூர் அலிகான், ‘’அதற்கு ஆரம்பிக்காமலேயே அழித்து விடலாம். ஏதோ இப்போது தான் கட்சியை ஆரம்பித்து இருக்கோம். எனக்குப் பின்னாடி பத்து பேர் வராங்க. அவ்வளவு ஆர்வமாக இருக்காங்க. அப்படியெல்லாம் எல்லாம் என் கட்சியை இன்னொரு கட்சியுடன் இணைக்கமாட்டேன்’’ என்றார்.

அப்போது அருகில் இருந்த நபர், ‘’மது ஒழிப்புக்காக ’சரக்கு’ என்ற படத்தை நான்கு கோடி ரூபாய்க்கு எடுத்து நஷ்டப்பட்டுக்கொண்டவர், நடிகர் மன்சூர் அலிகான். விவசாயிகளுக்காகப் போராடியவர். ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்காகப் போராடியவர். இப்படியெல்லாம் செய்தவர். மது ஒழிப்புக்காகப் போராடிய சசி பெருமாளுடன் களம் கண்ட தோழர் செல்லபாண்டி உள்ளிட்டப் பல்வேறு முக்கியத் தோழர்கள், இவர் நடத்தும் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். பகுத்தறிவு பற்றி பேசி மக்களுக்கான பிரச்னைகளைத் தீர்க்க தான், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அரசியல் களத்துக்கு வருகிறது’’ என்றார்.

அதன்பின்பேசிய நடிகர் மன்சூர் அலிகான் , ‘’எல்லோருக்கும் தெரியும். ஃபைனான்ஸ் கொடுத்தேன். பணம் திருப்பித் தரவில்லை. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு, 138 சட்டப்பிரிவின்படி வழக்கும் போட்ருக்கேன். நானே இப்போ எதற்காகவும் போறது இல்லை. ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு நபர் மீது ரூ.50ஆயிரம் கட்டி, வழக்குப் போட்டுள்ளேன். ரூ. 25 லட்சம் வரை ஃபைனான்ஸ் கொடுத்திருக்கேன். உண்மையை தான் சொல்றேன். கேட்டாங்க. கொடுத்தேன். ஓரிருவர் கட்டுனாங்க. மீதி இருக்கிறவங்க யாரும் கட்டல. அதனால் பணமோசடி வழக்குப் போட்டிருக்கேன். இதை கேட்டு இருக்கிறவங்க. சம்பாதிச்சு நல்ல நிலையில் இருந்தீங்கன்னா, என்னிடம் வாங்கிய கடனை கொடுத்திடுங்க. எனக்குத் தேர்தல் செலவுக்குப் பயன்படும். அவ்வளவுதான்.

சென்னை எழும்பூரில் கமிஷனர் அலுவலகத்துக்கு இதுதொடர்பாக தான் புகார் கொடுக்கச் சென்றேன். சரிசெய்து கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். இந்த நிலையில் தான், நில மோசடி தொடர்பான வழக்கு உங்கள் மேல் இருக்கு அப்படின்னு சொல்லி மறுநாள் என்னை கைது செய்துட்டாங்க.

அதுக்கப்புறம் அது தவறுதலாகப் பதிவு ஆகி இருக்கிறது என்றும், சர்வே எண் மாறியதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நஷ்ட ஈடாக ரூ.10 லட்சத்தைத் திருப்பி அளித்துள்ளனர். அது தொடர்பாக எந்தச் செய்தியும் வரவில்லை. மன்சூர் அலிகானை கெடுக்கத்தான் செய்திகள் போடுவீங்க. பார்ப்போம். எங்களுக்கும் ஆசைகள் இருக்கு. மக்கள் சேவை செய்யணும்னு. நாற்பது எம்.பிக்களில், என்னிடம் இல்லாத திறமை மற்றவர்களிடம் இருந்தால் விட்டுடலாம். வாழ்க்கை ஒரு போராட்டம். நான் மக்களுக்காக களத்தில் நிற்பேன்’’ என முடித்துக்கொண்டார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.