Bala: இங்கிலீஷ் நடிகர்களை பாலா சாரிடம் விட்டு சுளுக்கெடுக்கணும்.. ஏஞ்சலினா ஜோலி படம் பார்க்கும் மிஷ்கின்.. மன்சூர் கலாய்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bala: இங்கிலீஷ் நடிகர்களை பாலா சாரிடம் விட்டு சுளுக்கெடுக்கணும்.. ஏஞ்சலினா ஜோலி படம் பார்க்கும் மிஷ்கின்.. மன்சூர் கலாய்

Bala: இங்கிலீஷ் நடிகர்களை பாலா சாரிடம் விட்டு சுளுக்கெடுக்கணும்.. ஏஞ்சலினா ஜோலி படம் பார்க்கும் மிஷ்கின்.. மன்சூர் கலாய்

Marimuthu M HT Tamil
Jan 10, 2025 01:31 PM IST

Bala: இங்கிலீஷ் நடிகர்களை பாலா சாரிடம் விட்டு சுளுக்கெடுக்கணும்.. ஏஞ்சலினா ஜோலி படம் பார்க்கும் மிஷ்கின்.. மன்சூர் கலாய்த்துள்ளார்.

Bala: இங்கிலீஷ் நடிகர்களை பாலா சாரிடம் விட்டு சுளுக்கெடுக்கணும்.. ஏஞ்சலினா ஜோலி படம் பார்க்கும் மிஷ்கின்.. மன்சூர் கலாய்
Bala: இங்கிலீஷ் நடிகர்களை பாலா சாரிடம் விட்டு சுளுக்கெடுக்கணும்.. ஏஞ்சலினா ஜோலி படம் பார்க்கும் மிஷ்கின்.. மன்சூர் கலாய்

வணங்கான் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவும், பாலா திரைத்துறைக்கு அறிமுகமாகியதன் 25ஆம் ஆண்டு விழாவும், சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

அப்போது பேசிய நடிகர் மன்சூர் அலி, ’’பிச்சை பாத்திரம் ஏந்திவந்தேன். ஐயனே என் ஐயனே. பாலா ஒரு யுனிவர்ஸல் டைரக்டர். அவங்களோட எல்லா படத்தையும் பார்த்திருக்கேன். திகட்டுனதே இல்லை. அவன் இவன் படத்தில் விஷால் ஆடுன மாதிரி அப்படி திரும்ப ஆட முடியுமா என்பது சந்தேகம் தான். அப்படி ஆடவைச்சிருப்பாங்க.

பிதாமகன் படத்தில் சிவகுமார் சாரின் வசனத்தை பேசி நடிக்க வைச்சிருப்பாங்க. அதை அந்தக்காலத்தில் நாம் பார்க்க வாய்ப்பு இல்லை. சூர்யா சார், லைலா, சிம்ரன் ஆடுன அந்தப் பாட்டில் அவங்க நடிக்குறாங்கன்னு ஒரு ஃபிரேமிலும் சொல்லவே முடியாது. அந்தப் படத்தை எத்தனை தடவை தொலைக்காட்சியில் போட்டாலும், வைச்ச கண் வாங்காம, வீட்டில் பல வேலைகள் இருந்தாலும், கண் அதிலேயே இருக்கும். பார்த்திட்டே இருப்போம். தாரை தப்பட்டைன்னு ஒரு படம், சரத் குமார் சார் பொண்ணு, சசி குமார் இவங்க எல்லோரும் நடிச்ச மாதிரியே சொல்லமுடியாது. ப்பா, இவர் ஒரு யுனிவர்ஸல் டைரக்டர்னு சும்மா சொல்லக்கூடாது.

இங்கிலீஷ் நடிகர்களை பாலா சாரிடம் விட்டு சுளுக்கெடுக்கணும்: மன்சூர் அலிகான்

வடமாநிலத் தொழிலாளிகள் எல்லோரும் இங்கு வந்து வேலை செய்றாங்க. இங்கிலீஷ்காரங்க நம்மளை அடக்கி ஆண்டங்கல்ல, அந்த மாதிரி இங்கிலீஷ் நடிகர்களை இங்கு கூட்டி வந்து, பாலா ஐயாகிட்ட விட்டு சுளுக்கு எடுக்கணும்.

(மன்சூர் அலிகானை நேரத்தைக்காட்டி முறைக்கிறார், இயக்குநர் மிஷ்கின்) நீங்கள் எல்லாம் பேசுவீங்க. மன்சூர் அலிகான் மைக்கை காட்டினவுடனே, பிசாசு டைரக்டர் மைக்கை காட்டுவீங்க.

இங்கிலீஷ் படம் நிறைய பார்க்கிறேன். அவங்களுக்கு நடிக்கவே தெரியல. ஏஞ்சலினா ஜோலி படங்கள் அந்தமாதிரி, மிஷ்கின் தான் நிறையப் பார்ப்பார். கொண்டுவந்து பாலா சார்கிட்ட விடுங்க. நன்றாக சுளுக்கு எடுப்பார். நல்ல படங்களைத் தருவார். சீரியஸாக நான் பேசுறேன். தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் மொத்தமும் இங்கு நிற்குது.

லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு பிராஞ்ச் திறங்க: மன்சூர் அலிகான்

சமுத்திரக்கனி சார், தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தை முதலில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒன்னு திறங்க. இங்கு பல அரசியல், குடும்ப அரசியல், சினிமாவுக்கு சிக்கல், பலருக்கு விக்கல், எல்லாரும் கட்டுப்படுத்தப்பார்க்கிறாங்க. எந்த கட்டுக்கும் அடங்காத மாமனிதன் தான், பாலா. அப்படிதான் இருக்கணும். அந்த பிடிவாதம் இருக்கணும். இந்த டைட்டிலில் பார்த்தீங்கன்னா, வணங்கான் பாலாவின் தான் சொன்னாங்க. அப்படிப்பட்டவர் தான், பாலா.

இந்த ஒருவிழா தான், மதியம் 2 மணிக்கு ஆரம்பிச்சு, நைட் இரண்டு மணி வரைக்கும்போகுது. நடிகர் அருண் விஜய், இது உனக்கு திருப்பு முனையான படம். அப்பாவின் ரெக்கார்டை முறியடிக்கணும். நான் நடித்த முதல் படம் ‘வேலை கிடைச்சிருச்சு’ ஐயா கூட தான் நடிச்சேன். அந்தளவு முக வசீகரமானவர். அவர் பையன் நீங்களும் அழகாக இருக்கீங்க. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையட்டும். வணங்கானுக்கு வாழ்த்துகள்’’ என முடித்தார், மன்சூர் அலிகான்.

பாலு மகேந்திராவின் கல்லறை அருகே புதையுங்கள் என்ற பாலா:

அதனைத்தொடர்ந்து பேசிய எழுத்தாளர் பவா செல்லத்துரை, ‘’பாலாவை முதலில் பிடிக்கக் காரணம், பாலு மகேந்திரா சார் தான். பாலா மீது பாலுமகேந்திரா சாருக்கு இருக்கும் அன்பு. அவரை பிடிக்காதமாதிரி காட்டிக்கொண்டு அவரை நேசிப்பார். பத்து தடவை பேசினால், 20 தடவை பாலா பெயரை யூஸ் பண்ணுவார். என் மகன் மிஷ்கினை போட்டோ எடுத்து வீட்டில் மாட்டினதைப் பார்த்திட்டு, இந்த ஓநாயையே இப்படி மாட்டியிருக்கீங்களான்னு சொன்னார். அடுத்து, பாலுமகேந்திரா சாரின் கல்லறையைப் பார்த்திட்டு, என் மனைவி சைலஜாவிடம், நான் செத்திட்டாலும் என்னைக் கொண்டு வந்து, இங்கு புதைச்சிடுங்கன்னு சொன்னார்’’ என இயக்குநர் பாலா பற்றி பேசிமுடித்தார், பவா செல்லத்துரை.

நன்றி: பிஹெண்ட்வுட்ஸ் யூட்யூப் 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.