Mansoor ali khan: விஜய் உடனான உறவு.. ‘த்ரிஷா சீக்கிரமா அமைச்சராகிடுவார்’ .. மன்சூர் மீண்டும் சர்ச்சைப்பேச்சு
Mansoor ali khan: திரிஷா குறித்து நான் எங்கு தவறாக பேசினேன். நான் பேசிய வீடியோவை கட் செய்து பரப்பி, நாசமாக்கி விட்டார்கள். அவர் இன்னும் கொஞ்ச நாளில் அமைச்சராகி விடுவார் - திரிஷா குறித்து மன்சூர்!
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய பேச்சு சர்ச்சையாகி இருக்கிறது.
சென்னையில் இன்று நடிகர் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் த்ரிஷா விவகாரம், தனுஷ் - நயன் தாரா சண்டை உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அப்போது மன்சூர் அலிகான் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
முன்னதாக, நடிகை திரிஷா குறித்து மன்சூர் பொது இடத்தில் அநாகரிகமாக பேசிய விவகாரம் குறித்து கேட்ட போது, ‘ திரிஷா குறித்து நான் எங்கு தவறாக பேசினேன். நான் பேசிய வீடியோவை கட் செய்து பரப்பி, நாசமாக்கி விட்டார்கள். அவர் இன்னும் கொஞ்ச நாளில் அமைச்சராகி விடுவார்’ என்றார்.
நடிகர் விஜய் புதியதாக கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையிலும், அண்மையில் விஜய் த்ரிஷா இணைந்திருக்கும் போட்டோக்கள் வெளியானதை குறிப்பிட்டும், அவர் இப்படி பேசி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மீண்டும் த்ரிஷா குறித்து மறைமுகமாக பேசியதற்கு சோசியல் மீடியாவில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
தனுஷ் விவகாரத்தை பொருத்தவரை தனுஷ் நயன்தாரா தன்னுடைய உழைப்பை சுரண்டி விட்டதாக கூறியிருக்கிறார் நயன்தாரா ஒரு சக நடிகை அவர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்திருக்கிறார் அவர் படத்தில் நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார். தனுஷ் ஹாலிவுட் திரைப்படம் வரை நடித்து விட்டார் அவருக்கு 10 கோடி எல்லாம் ஒரு சின்ன தொகை தான் அப்படி இருக்கும் பொழுது ஒரு சில காட்சிக்காக 10 கோடி கேட்பதெல்லாம் நியாயம் இல்லை தனுஷ் இப்படி செய்யக்கூடாது
டாபிக்ஸ்